வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் அடையாள உண்ணாவிரதம்

வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்!

எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே!

மக்களை மக்களாக நடத்துங்கள்!’

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது.

இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.