இலங்கைப் பிரச்சனை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: தா.பாண்டியன்

இலங்கைப் பிரச்சனை குறித்து மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

மதுரையில் இன்று செய்தியாளர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கையில் போ‌ர் நிறுத்த‌ம் செ‌ய்த பின்னரே அரசில் தீர்வு பற்றி பேச வேண்டும். ஐ.நா பொதுச் செயலர் இலங்கைக்கு நேரில் சென்று பார்வையிடுவதோடு அங்கு உடனடியாக போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரலாம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு‌ள்ளதா‌ல் இலங்கைப் பிரச்சனை குறித்து மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எ‌ன்றா‌ர் தா.பா‌ண்டிய‌ன்.

இலங்கைப் பிரச்சனையில் த‌மிழக அரசு இதுவரை எடு‌த்த முடிவுகள் எதுவும் பலனளிக்கவில்லை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய தா.பா‌ண்டிய‌ன், ஆனால் இலங்கைப் பிரச்சனைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தற்போது பதவி விலக மறுக்கிறார் எ‌ன்றா‌ர்.

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல எ‌ன்று‌ம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்கமாட்டோம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.