உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்- முகேசுக்கு 3; அனிலுக்கு 6வது இடம் !

நியூயார்க்: போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டாப் 10 பணக்காரர்கள் வரிசையில் இந்தாண்டும் 4 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானிக்கு 3வது இடமும், அனில் அம்பானிக்கு 6வது இடமும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 3வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 78,792 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 7வது இடத்திலிருந்த அவரது தம்பி அனில் அம்பானிக்கு ஒரு இடம் முன்னேறி 6 வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 44,100 கோடி ரூபாயாகும்.

கடந்தாண்டு இரண்டாவது இடத்தில் இருந்த லட்சுமி மிட்டல் இம்முறை நான்காவது இடம்பிடித்துள்ளார்.

பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் முதல் முறையாகப் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் அவரது சொத்து மதிப்பு 29,841 கோடி.

கடந்தாண்டு 9வது இடத்தில் இருந்த விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு தற்போது டாப் 10 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பப்பெட் தொடர்ந்து முதலிடத்தையும், ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரி எல்லிஸன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.