புலிகளின் தற்கொலைப் படை முகாம் இலங்கை ராணுவம் கைப்பற்றியது

கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படை பயிற்சி முகாமை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து, இலங்கை ராணுவம் கூறியதாவது: இலங்கையின் வடக்கு பகுதியில், விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படை முகாமினை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். இந்த முகாமில் தான் மனித வெடிகுண்டாக செயல்படும் நபர்களுக்கு, பிரபாகரன் கடைசி விருந்து கொடுப்பது வழக்கம். இந்த முகாமை கைப்பற்றும் போது நடந்த சண்டையில் புலிகள் தரப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த முகாமில் நவீன வசதிகள் செய்யப் பட்டுள்ளன. ஒரு ஆடிட்டோரியம், நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், மற்றும் முகாமின் ரகசிய இடத்தில் உணவுப் பொருட்களை பாதுகாக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமிற்கு, புலி தலைவர் பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வது உறுதியாகியுள்ளது. இந்த முகாமில் புலிகளின் சீருடைகளும் பெரு மளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.