கரிநாளன்று நெதர்லாந்தில் மகிந்தவிற்கு செருப்படி

ஈழத்தில் தனியரசாண்ட தமிழினமானது, பிரித்தானியாவின் திட்டமிட்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாக்கப்பட்டு சிங்களத்திற்கு அடிமைசாசனம் எழுதப்பட்ட 61 ஆம் ஆண்டில் காலடிவைக்கும் இவ்வேளையில், பெற்றசுதந்திரத்தை இறுக்கமான பாதுகாப்புக்கெடுபிடிகளிற்கு மத்தியில் பேரினவாதசிங்களஅரசானது தனது விசுவாசிகள், ஒட்டுண்ணிகள், தமிழினத்துரோகிகளுடன் கொழும்பில் கொண்டாடி, உலகத்திற்கு படம்காட்ட, புலம்பெயர்நாடுகளில் அத்தினமான பெப்ரவரி 4 ஐ தமிழ்மக்கள் கரிநாளாக கடைப்பிடித்தனர். நெதர்லாந்திலும் அம்சர்டாம் நகரில் உல்லாசப்பயணிகள் அதிகமாகக்கூடும் டாம் பிளைன் எனுமிடத்தில் உணர்வுபூர்வமாக கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பெருந்திரளாக நெதர்லாந்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் தமிழ்மக்கள் கூடியிருந்தனர்.

ஈழத்தமிழினத்தின் விடிவிற்காக இந்திய, தமிழக அரசுகளிடம் நீதிகேட்டு உயிர்க்கொடை புரிந்த “வீரத்தமிழ்மகன்” முத்துக்குமரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மதியம் 2மணியளவில், சுடரேற்றிவைக்கப்பட்டு எழச்சி முழக்கங்கள் ஆரம்பமாகின.

விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் பாதுகாவலர்கள்.. அவர்களின் ஆயுதங்களை கீழேவைக்க அழுத்தம் கொடுக்கவேண்டாம்.

தமிழீழத்தனியரசே எமக்கு வேண்டும்.

சிங்களஅரசே! அப்பாவித்தமிழ்மக்கள் மீதான படுகொலைகளை உடன் நிறுத்து

நோர்வே! நியூமா!

இந்தியா மீண்டும் துரோகம் இழைக்காதே!

போன்ற கோசங்கள் அங்குள்ள இளையோர்களாலும் மக்களாலும் வானுயர எழுப்பப்பட்டன.

மேலும், மக்களின் பார்வைக்கு மகிந்தவின் உருவப்பொம்மை வைக்கப்பட்டு கொடுங்கோலன் மகிந்தஅரசின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களினால் சாகடிக்கப்ட்ட பச்சிளம் குழந்தைகளின் பொம்மைகள் இரத்தக்களரிகளுடன் அங்குவைக்கப்ட்டிருந்தன. அதை தூக்கிவைத்துக்கொண்டு அங்கிருந்த தாய்மார்கள் ஒப்பாரிவைத்து கதறியழுத காட்சியைக்கண்டு அங்கிருந்த உல்லாசப்பயணிகள் திகைத்தபடி நின்றிருந்தார்கள். அவர்களிற்கு வன்னியில் நடக்கும் உண்மைநிலவரத்தை விளக்கி துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் கொடுக்கப்பட்டன.

நிகழ்வின் ஒருகட்டத்தில் அங்குள்ள மக்கள் கொடுங்கோலன் மகிந்தவின் உருவப்பொம்மையை தெருவெங்கும் இழுத்து செருப்பால் அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்தனர்.

மதியம் 2மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு மாலை 5மணிவரை தொடர்ந்து நடைபெற்று அதிகமான உல்லாசப்பயணிகளின் கவனத்தையும் ஈர்த்தது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.