பிரான்சில் வரலாறு காணாத எழுச்சி. 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பற்கேற்பு.

பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள எக்கோல் மிலித்தர் என்ற இடத்திற்கு முன்னால் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள இடத்தில் 04.02.2009 அன்று பி.பகல் 2.30 மணியளவில் கறுப்புதின ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள், குளிரின் மத்தியிலும் சிறீலங்கா அரசே அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலையை நிறுத்து, தமிழீழவிடுதலைப்புலிகள் தான் எமது ஏக பிரதிநிதிகள, சர்வதேச ஊடகவியலாளர்களை தமிழ் மக்கள் பிரதேசங்களுக்கு அனுப்பு போன்ற இன்னபல உணர்வூட்டும் பதாதைகளைத் தாங்கியவாறும், உணர்ச்சிக் கோசங்களை வானதிரக் கூவியும், தமிழீழத் தேசியக் கொடி, மஞ்சள் சிவப்பு வண்ணக் கொடிகளைத் தாங்கிய வாறும் மிகவும் உணர்வு பூர்வமாக கறுப்புதின ஆர்ப்பாட்ட நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிரஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் ஜீன் வோன் கோக் அவர்கள் நேரடியாகவே கறுப்புதின ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்ததுடன் மகஜரையும் நேரடியாகவே பெற்றுச் சென்றிருந்தார். அத்துடன் நகரசபையின் நகர பிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைக்கு எதிராக தமது கருத்துக்களை மிகவும் உணர்ச்சி பூர்வமாக முன்வைத்திருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கம் தனது 61வது வருட சுதந்திரதினத்தை ஆடம்பரமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று பிரான்சில் தமிழ் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுதிதியுள்ளதுடன், இந்த எழுச்சிக்கு ஆதரவாக பிரான்சில் உள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி தமது ஆதரவினை வழங்கியிருந்தன.

அத்துடன் வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்த நிலையில், வர்த்தக நிலையங்களை கறுப்புத் துணிகளால் மூடி தமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

உலகப் புகழ் பெற்ற ஈவிள் கோபுரத்தின் பிற்பாகத்தில் 2006ம் ஆண்டு சாவிலும் வாழ்வு நிகழ்வு நடைபெற்றிருந்தது. இதன் போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். அதைப்போலவே இம் முறையும் வரலாறு காணாத 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒன்று கூடி சிறிலங்கா அரசின் அடக்கு முறைகளை சர்வதேசத்தின் காதுகளுக்கு எடுத்துச் சொல்லியுள்ளனர்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.