சிவகாசி ஸ்டேட் வங்கியில் ரூ.43 லட்சம் கையாடல் ஊழியருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.15 லட்சம் அபராதம்

மதுரை:விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்டேட் வங்கியில் ரூ.43 லட்சம் கையாடல் வழக்கில், மாஜி கிளார்க் ஜெயசந்திரனுக்கு ஏழாண்டு சிறை, 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது

.சிவகாசி ஸ்டேட் வங்கி டவுன் கிளை கிளார்க் ஜெயசந்திரன்(50). இவரது மனைவி மாரியம்மாள்(49). இவர் சிவகாசி ஸ்டேட் வங்கி மெயின் கிளை கிளார்க். இவரது சகோதரர்கள் பரமேஸ்வரன், செந்தில்குமார்.

இருவரும் சிவகாசி அருகே பனையாடிபட்டியில் வீனஸ் பயர் ஒர்க்ஸ் நடத்தி வந்தனர்.இதன் பெயரில் வங்கிக்கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து, வாடிக்கையாளர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை தம்பதியினர் கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது. 1999-2002ம் ஆண்டு தணிக்கையின் போது 43 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி துணைப் பொது மேலாளர் பாலச்சந்திரன் கொடுத்த புகார்படி ஜெயசந்திரன் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இதில் ஜெயசந்திரன், மாரியம்மாள், பரமேஸ்வரன், செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்தது. சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு வக்கீல் பொன்னுசாமி ஆஜரானார்.நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு: ஜெயசந்திரன் மீதான குற்றங்கள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை, ரூ.15 லட்சம் அபராதம், கட்டத்தவறினால் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.மாரியம்மாள், பரமேஸ்வரன், செந்தில் குமார் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.