சர்ச்சையில் சிக்கினார் சாதனை நாயகன் பெல்ப்ஸ

வாஷிங்டன் : அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கஞ்சா அடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மைக்கேல் பெல்ப்ஸ் 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அண்மையில் ஒரு பத்திரிகையில், மைக்கெல் பெல்ப்ஸ் மாரிஜூவனா பைப்புடன் – (சிகரெட் போன்ற புகை பொருட்களை புகைக்க பயன்படுத்தப்படும் குழாய்), இருந்த காட்சி வெளியானது . இதனை தொடர்ந்து அந்த பைப்பில் ‌தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்ததாகவும், பெல்ப்ஸ் போதை பொருட்களை பயன்படுத்துகிறார் எனவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரிச்லாண்ட் மாகாண ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் பெல்ப்ஸ் மரிஜூவானா பைப்பை உபயோகப்படுத்துவது நிரூபிக்கப்பட்டால், மற்றவர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ அதே தான், பெல்ப்சுக்கும் வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.