தோல்வியின் பிடியில் உள்ளனர் விடுதலைப்புலிகள் : சுதந்திரதின விழாவில் ராஜபக்ஷே உரை

கொழும்பு : இலங்கையின் 61வது சுதந்திரம் தினம் இன்று கொண்டாடப்படுகிறது . சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அதிபர் ராஜபக்ஷே, 25 ஆண்டுகளாக இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் விடுதலைப்புலிகள் தோல்வியின் பிடியில் உள்ளார்கள் என கூறினார்.

ராஜபக்ஷே உரையின் விபரம் பின்வருமாறு : விடுதலைப்புலிகள் நிச்சயமாக இன்னும் ஒரு சில தினங்களில் முற்றிலுமாக தோல்வியை சந்திப்பார்கள். பயங்கரவாதத்தின் சுவடுகள் மறைய துவங்கியுள்ளன. வடக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள், தற்போது வட கோடிப்பகுதி காட்டுக்குள் துரத்தப்பட்டுள்ளனர். போர் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் காரணமாகவே முழு வீச்சில் தாக்குதல் நடத்த முடியவில்லை. இலங்கை ராணுவம் நடத்தியுள்ள துணிகர தாக்குதல் காரணமாகத்தான் , பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தினத்தை பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் கொண்டாட முடிந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் எனும் பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் இலக்காக நமது நாடு இருந்து வந்தது. சர்வதேச நாடுகள் இது வரை இலங்கைக்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்படுத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தை அனைத்தும், விடுதலைப்புலிகள் வடக்கு பிராந்தியத்தில் தங்களுக்கென ஒரு அரண் அமைக்கவே வழி வகுத்தது. நாட்டை பிரித்தது. அமைதியை சீர்குலைத்தது. அச்சுறுத்தலை பலமடங்கு அதிகரித்தது. தற்கொலைப்படை தாக்குதலில் பீதியில் மக்களை தள்ளியது. எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக‌ அமைந்தது. தற்போது இலங்கை ராணுவ தாக்குதலால், விடுதலைப்புலிகள் முற்றிலுமாக தோல்வியை தழுவார்கள். இவ்வாறு ராஜபக்ஷே கூறியள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.