பங்குச்சந்தை: துவக்கமே அமர்க்களம்!

மும்பை: நாட்டின் பங்குவர்த்தகம் இன்று அமர்க்களமாகத் துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே 156 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகத்தைத் துவங்கியது சென்செக்ஸ்.

தேசிய பங்குச் சந்தை நிப்டியும் 46 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகத்தை ஆரம்பித்தது. அமெரிக்க – ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் ஆரோக்கியமான போக்கு காரணமாகவே இந்த உயர்வு என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்கு விற்பனை அளவு 6 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதன் காரணமாகவே இன்று இந்தியப் பங்குச் சந்தையில் காளை துள்ள ஆரம்பித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.19 சதவிகிதம் வரை லாபத்தில் கைமாறின. ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளின் பங்குகளும் 1.5 சதவிகிதம் வரை லாபத்தில் விற்பனையாகி வருகின்றன.

இன்போஸிஸ், விப்ரோ, டிசிஎஸ் பங்குகள் லாபத்தில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் சத்யம் பங்குகள் மட்டும் 7 சதவிகித நஷ்டத்தில் கைமாறி வருகின்றன.

எல் அண்ட் டி, பிஎச்இஎல், பார்தி ஏர்டெல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் லாபத்தில் கைமாறி வருகின்றன.

முற்பகல் 11.30 மணி நிலவரம்: சென்செக்ஸ: 9311.16 (+161.86) நிப்டி: 2830.10 (+46.20)

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.