`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.02.09) செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இடம் பெற்ற இரண்டு வெவ்வேறான சம்பவங்களின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அக்கறானையில் நேற்று மாலை, கால் நடைப் பண்னைத் தொழிலாளியான 28 வயதான இளையதம்பி ராதாகிருஸ்ணன் என்ற இளம் குடும்பஸ்தர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துறைநீலாவனையைச் சேர்ந்த இவர் தனது தொழிலின் நிமித்தம் அங்கு தங்கியிருந்த வேளை கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.இதே வேளை நேற்று மாலை வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மோதலின் போது கொல்லப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் என்றும் அந்த பகுதியில் மேற் கொள்ளப்டப்ட தேடதலின் போது சடலங்களுடன் கிளேமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது
!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டனும் இலங்கை நிலவரம் குறித்து நேற்று கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு நேற்று வாஷிங்டனில் உள்ள மாநில திணைக்களத்தில் இடம்பெற்றது. தமது சந்திப்பின் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கூட்டறிக்கை ஒன்றினையும் இருவரும் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது வடக்கு பிரதேசத்தின் மனிதாபிமான நிலவரம் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து, அரசியல் ரீதியான தீர்வொன்றினை இலங்கையில் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளும் பொருட்டு இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை அழைத்து வருதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இணைத்தலைமை நாடுகள் நேற்று வெளியிட்ட அறிக்கையினை தாம் வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள பாதுகாப்பு வலய பிரதேசங்களில் தாக்குதல்கள் மேற்கொள்வதை இருதரப்பினரும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு இரு தரப்பினரும் இடமளிப்பதுடன், தொண்டு நிறுவனங்கள் அந்த பகுதிகளில் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இரண்டு தரப்பினரும் சர்வதேச போர்முறைச் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் இணைத்தலைமை நாடுகளின் நேற்றைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது
!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குக் கட்டாயமாக மதிப்பளிப்பதுடன் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் இருதரப்பினரும் எவ்விதமான தாக்குதல்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று இலங்கைக்கு உதவி வழங்குகின்ற இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைக்கு உதவி வழங்குகின்ற இணைத்தலைமை நாடுகளான நோர்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தினூடாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் வடக்கே யுத்தம் நடைபெறுகின்ற பிரதேசங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிர் சேதங்களைத் தவிர்ப்பதற்காக விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைப்பது தொடர்பில் பரிசீலிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பை இழப்பதற்கு இன்னும் சிறிது காலமே ஒருவேளை இருக்கலாம் என்பதனால், இதற்காக மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவது என்பது பயனற்றதாக இருக்கும் என்பதனை விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இருதரப்பினரும் உணர வேண்டும்.

மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை யுத்தம் நடைபெறுகின்ற பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவுகின்ற வகையில் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் அந்தக் குழு இருதரப்பிடமும் கோரியுள்ளது.

இலங்கையின் வடக்கில் மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வேளையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது புலிகளும் இலங்கை அரசாங்கமும் எவ்விதமான தாக்குதல்களையும் மேற்கொள்ளக் கூடாது. அதேபோல, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அல்லது ஏனைய மருத்துவ கட்டமைப்பு பகுதிகளுக்குச் சமீபமாகவும் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது.

இடம்பெயர்ந்துள்ளவர்களில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதினால் இருதரப்பினரும் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதுடன் புலிகளும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக njuptpf;fg;gLfpwJ. வன்னியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் மீது சிறிலங்கா படையினர் புதிய ரக எரிகுண்டுகளை பீரங்கிகள் மூலம் வீசித் தாக்குகின்றனர்.
இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடங்களில்மனித உடல்களும், கட்டடங்களும், மரங்களும் கூட தீப்பற்றி எரிவதுடன் பாரிய சேதங்களும் ஏற்படுகின்றன.
சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எரிகணைகளை பீரங்கிகள் மூலம் ஏவுவது போல தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை ஆராயும் போது தெரிவதாக .njuptpf;fg;gLfpwJ.அனைத்துலக விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை எறிகணைகள் பொதுமக்களுக்கு பாரிய எரிகாயங்களை ஏற்படுத்துவதனால் 1980-களில் உருவாக்கப்பட்ட ஜெனீவா சட்ட விதிகளிலும் (Under the Geneva Treaty of 1980) இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு இதனை இராசாயன ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளை பொஸ்பரஸ் எறிகணைகள் வெடிக்கும் போது பாரிய புகை மண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. இதன் போது ஏற்படும் எறிகணை சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் இரசாயனப் பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டதாகும்.
வளிமண்டலத்தில் ஒக்சிசன் போதியளவில் இருக்கும் வரையிலும் பொஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் தன்மை கொண்டவையாகும்.
முன்னர், வியட்நாம் போரின் போது அமெரிக்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்தவகை எறிகணைகள், அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தினரினால் காசா பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்கு வைத்து கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் சிறிலங்கா தாக்குதல்களில் படுகாயமடையும் வன்னி மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழலை ஏற்படுத்தி, தனது இனப் படுகொலை போரை விரிவுபடுத்துகின்றது சிறிலங்கா. அதேசமயம், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை, அது ஒரு இராணுவ இலக்கு என்று நியாயப்படுத்தி இருக்கின்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
பிரித்தானியஸ்கைஒலிபரப்பு நிறுவனத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் – “புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஒரு நியாயபூர்வமான இராணுவ இலக்குஎன்றும், அதன் நடத்தப்படும் தாக்குதல்கள் சரியானதுதான் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, பொதுமக்கள் அங்கு இல்லை இருப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்றார். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் புலிகள் தான் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் அங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என்ற தேவை இல்லைஎன்று தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, படையினரின் தாக்குதல் இலக்கு ஒருபோதும் தவறியது கிடையாது எனவும் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!
இதேவேளை, கடந்த வாரம் உடையார்கட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நானயக்கார, புதுக்குடியிருப்பில் மருத்துவமனை இயங்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்கு போக வேண்டும்? எனக் கேட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
இலங்கையின் 61ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகின. காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது ஜனாதிபதி தேசிய கொடியினை ஏற்றி வைக்க பாடசாலை மாணவிகளால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த அனைவரிற்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களிற்கு உரையாற்றினார்.

இங்கு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது,”இன்று நாம் உள்நாட்டில் உள்ள எதிரிகளை தோற்கடிக்கும் திறனினைப் பெற்றுள்ளோம். இலங்கையின் வடக்கே இராணுவ வீரர்கள் வெற்றிகளை பெற்று தேசிய கொடிகளை நாட்டியுள்ளனர். அத்துடன் வரலாற்றில் இம்முறை சுதந்திர தினத்தின் போது நாடுபூரகவும் தேசியக் கொடியினை மக்கள் பறக்கவிட்டுள்ளனர்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் , நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டு, நாடு முழுமையாக சுதந்திரமடைந்து வரும் நிலையில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக புலம் பெயர்ந்து சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி தனது சுதந்திரதின உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தனது சுதந்திரதின உரையில் இரண்டு வசனங்கள் தமிழிலும் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!
அனைத்துலக ரீதியில் பொதுமக்களுக்கு எதிராக அதிகம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியில் சிறிலங்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது.
பெல்ஜியம் பிறசல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியிருக்கின்றது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்காவின் வடபகுதியில் அரச படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ முன்னெடுப்பில் பல அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்படுவதுடன் இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், இராணுவ தாக்குதல்கள் குந்தகம் விளைவித்து வருகின்றன.
சிறிலங்காவின் இராணுவ முன்னெடுப்புக்களில் தாம் வெற்றியடைந்து வருவதாக அரசு கூறி வருகின்ற போதிலும், ஏராளமான பொதுமக்கள் ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன், தற்போதைய நிலைமை அதைவிட மோசமடைந்துள்ளது.
உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் முன்னெடுப்புக்களில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக இலங்கையின் வடபகுதி காணப்படுகிறது.
இஸ்ரேலியப் படையினரின் முன்னெடுப்பால் பாதிப்படைந்த காசா நிலப்பரப்பு, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள மடகஸ்கார் பகுதி, அரச படைகளுக்கெதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் ரோறக் போராளிகளின் போர்ப் பகுதி போன்றன, ஏனைய மூன்று வன்முறை அதிகம் நிறைந்த பகுதிகளாகக் காணப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தினர் சிறிலங்காவின் சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் சிறிலங்காவின் சிங்கக் டியை ஏற்ற வேண்டும் என்று அங்குள்ள மக்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக தமிழீழ மக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில்யாழ். குடாநாட்டு வர்த்தகர்களையும் பொதுமக்களையும், தமது கடைகள் மற்றும் வீடுகள், கட்டடங்களுக்கு முன்பாக சிங்கக்கொடியை ஏற்ற வேண்டும் என இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம் இந்த அறிவித்தலை விடுத்து வரும் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினரும், சுதந்திர நாளில் சிங்கக் கொடியை ஏற்றத் தவறும் வர்த்தகர்கள், தொடர்ந்தும் தமது கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி மற்றும் தென்மராட்சியில் இயங்கும் கடைகளுக்கு, கடந்த சில நாட்களாக இத்தகைய எச்சரிக்கைகள் பல தடவை விடுக்கப்பட்டு வருவதாகவும், பழிவாங்கல் மற்றும் தண்டனைக்கு அஞ்சி, வர்த்தகர்கள் சிங்கக்கொடியை ஏற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், ஈருருளி மற்றும் உந்துருளி உட்பட அனைத்து வீதிப் போக்குவரத்து வாகனங்களிலும் சிங்கக்கொடி பறக்க விடப்பட்டிருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் சிங்கக்கொடி பறக்கவிடப்படாத வாகனங்களின் சாரதிகளது தேசிய அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்கள் இராணுவ முகாம்களுக்கு சமூகமளிக்கும்படி உத்தரவிடப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என கொழும்பில் இருந்து ஏராளமான கொடிகளை யாழ். குடாநாட்டிற்கு இறக்குமதி செய்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றை கட்டாயப்படுத்தி விற்பதன் மூலம் இலாபம் ஈட்டி வருவதாகவும் தெரியவருகிறது.
இத்தகைய படங்களைக் காட்டுவதன் மூலம் அனைத்துலக பரப்புரையிலும் யாழ். மக்கள் சிங்கள அரசை ஆதரிப்பதான செய்தியை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அங்குள்ள கல்விமான்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், மக்களை கட்டாயமாக பொது இடங்களுக்கு வரும்படி உத்தரவிட்டு, அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்புக் கூட்டம் நடத்த வந்துள்ளதாக படங்களை எடுத்து வெளியிடுவது தற்போது யாழ். குடாநாட்டில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகளவில் காணப்படும் நாடுகளினது இலங்கைத் தூதுவராலயங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களினால் குறித்த தூதுவராலயங்கள் தாக்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி மற்றும் கனேடிய இலங்கைத் தூதுவராலயங்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் 61 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது மேலும் பல நாடுகளினது தூதுவராலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத அரச சார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய அறிக்கை சமர்ப்பிக்காத அரச சார்பற்ற நிறுவனங்களை வவுனியாவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அகதி முகாம்களுக்கு செல்ல அனுமதி கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளின் 7 ஆவதும் இறுதியுமான விமான ஓடுபாதையை நேற்று செவ்வாய்க்கிழமை காலை தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியிலேயே இந்த விமான ஓடுபாதையை பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணியினர் நேற்றுக்காலை கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பிரமந்தனாறு குளத்திற்கு வடகிழக்கேயும் சுதந்திரபுரத்திற்கு மேற்கேயுமே இந்த விமான ஓடு பாதை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 2 கிலோ மீற்றர் நீளமும் 350 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விமான ஓடுபாதையின் 50 மீற்றர் தூரத்திற்கு தார் போடப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதியே பாவனையிலுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
கால்களில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
!!!!!!!!!!!
இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என பிரான்சிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றை தினத்தில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கறுப்பு தினமாகவும் கடையடைப்பு தினமாகவும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
mj;Jld; khngUk; xd;W $ly; ,d;W khiy 3 kzpf;F metro ecole militairew;f;F mUfpy; (line 8) y; eilngWk;

தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் விமானக் குண்டுவீச்சுக்களை உடன் நிறுத்தக்கோரியும், சர்வதேசமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் இப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!
 
india
இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ருவா‌ரியான கடைக‌ள் அடை‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளன. ஆ‌ங்கா‌ங்கே சில கா‌ய்க‌றி கடைக‌ள், உணவு ‌விடு‌திக‌ள் மட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்தன.

இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கு பொதும‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌‌ல் ந‌ல்ல வரவே‌ற்பு இருப்பதை காண முடிந்தது.

செ‌ன்னை‌யி‌ல் மு‌க்‌கிய வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள் அமைந்துள்ள ‌தியாகராய நக‌ர், புரசைவா‌க்க‌ம், பா‌ரிமுனை, பா‌ண்டிபஜா‌ர் உ‌ள்பட ப‌ல்வேறு இட‌‌ங்க‌ளி‌லும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த்து பெரும்பாலும் கடைக‌ள் அடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தன.

ஆனா‌ல் பேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ள் வழ‌க்க‌ம்போ‌ல் இய‌க்‌கப்பட்டு வருகின்றன. இதனா‌ல் பொதும‌க்க‌ள் எ‌ந்த‌விதமான பா‌தி‌ப்பு‌க்கு‌ம் ஆளாக‌வி‌ல்லை. வேலை‌க்கு செ‌‌ல்வோ‌ர் ‌சிர‌மமி‌ன்‌றி செ‌ன்றன‌ர்.

செ‌ன்னை புறநக‌‌ர் பகு‌திகளான குரோ‌ம்பே‌ட்டை‌யி‌ல் கடைக‌ள் ‌திற‌ந்‌திரு‌ந்தன. ஆனா‌ல் செ‌ங்கு‌ன்ற‌ம், புழ‌ல், கொள‌த்தூ‌ர், அ‌ம்ப‌த்தூ‌ர், ஆவடி ஆகிய பகுதிகளில் கடைக‌ள் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன. ஒரு சில டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

இதேபோ‌ல் மா‌நில‌ம் முழுவது‌ம் பெ‌ருவா‌ரியான கடைக‌ள் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததாகவும், ஆ‌ங்கா‌ங்கே உணவு ‌விடு‌திக‌ள், கா‌ய்க‌றிக‌ள் கடைகள் மட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‌விழு‌ப்புர‌ம், கடலூ‌ர் உ‌ள்பட பல மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல் ந‌ே‌‌ற்‌றிரவே பேரு‌ந்துக‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன. அ‌ந்த மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் பொது வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ற்கு பொதும‌க்க‌ள், வ‌ணிக‌ர்க‌ள் உ‌ள்பட ப‌ல்வேறு தர‌ப்‌பின‌ர் ஆதரவு தெரிவித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
‌இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ளை கொ‌ன்று கு‌வி‌த்து‌ வரும் ‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ த‌‌ஞ்சை, நாகை, ‌‌திருவாரூ‌ர் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் சா‌ர்‌‌பி‌ல் இ‌ன்று ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இ‌தி‌ல் ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கையில் தமிழர்கள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌‌ங்கள அரசை கண்டித்து தமிழக‌த்‌தி‌ல் அரசியல் கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் சா‌ர்‌பி‌ல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இ‌ன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்திய கம்யூனிஸ்டு ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத்மாவதி தலைமையில் நன்னிலம் பேரு‌ந்து நிலையம் அருகே ம‌றியல் செய்ய முயன்ற 100 பேர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு சாலை மறியல் செய்தனர். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

கு‌‌ம்பகோண‌ம் அருகே ‌வீடுக‌ளி‌ல் கறு‌ப்பு‌க்கொடி

இத‌னிடையே இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இலங்கையில் போர் நிறுத்த செய்யக்கோரி மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தியும் கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்துள்ள நாககுடி, மருத்துவக்குடி, கள்ளிக்குடி ஆகிய 3 கிராமங்களில் உள்ள 250‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வீடுகளில் இன்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இய‌ல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்த‌த்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஆளும் தி.மு.., இதற்கு அனுமதி தரவில்லை. மாறாக முழு அடைப்பு போராட்டத்தில் அரசு உடமைகளுக்கு தீங்கு விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய‌ப்படுவா‌ர்க‌ள் என்று அ‌றி‌வி‌த்தது.

இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.., ...தி.மு.., காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் முழு ஆதரவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் எந்த கடைகளும் திறக்கவில்லை. பெரும்பாலான கடைகள் திறக்காமல் பூட்டியே இருந்தது.

ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், சென்னிமலை, காங்கேயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கினாலும் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வெறிசோடி காணப்பட்டது. தினசரிசந்தைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

கிராம புறங்களில் உள்ள கடைகளையும் அடைத்து இலங்கை‌த் தமிழர்கள் மீது தங்களுக்குள்ள பாசத்தை வெளிப்படுத்தினர்
!!!!!!!!!!!!!!!!!

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக இன்று புதுச்சேரியில் பந்த் அனுசரிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. .

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின.

தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் அதிகமாக ஓடவில்லை. நேரு வீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, புதிய பேருந்து நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

சுற்றுலா பஸ் ஒன்றின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்களால் புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

!!!!!!!!!!!!!
இலங்கையில் சிறிலங்க படையினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பா..கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கவலை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணர்வுபூர்வமாக கையாளவில்லை என்றும் அவர் குற்றம் சா‌‌ற்‌றினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களுடன் இலங்கை‌த் தமிழர் பிரச்சனை குறித்து நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

போர்முனையில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற, அமைப்பு ரீதியான ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

இந்த பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, நிலைமையை மேலும் சீர்குலைக்கவும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!
மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பாய் (84), உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு 10 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டார்.

மார்புச் சளி இருந்ததால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், காய்ச்சலால் அவர் அவதிப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது உயர் மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு வாஜ்பாயின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை திருப்திகரமாக முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்ததும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உடனடியாக அங்கு சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார்.

!!!!!!!!!!!!
world
 அமெரிக்காவின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அந்நாட்டு அரசால் முன்வைக்கப்படும் எண்ணூறு பில்லியன் டாலர் பெறுமதியான ஊக்க நிதியானது, உலக அளவில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற நாடுகளின் உற்பத்தி பொருட்களை அனுமதிக்காத தற்காப்பு மனோபாவத்தை வளர்க்கக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் கவலைகள் வளர்ந்து வருகின்றன.
இந்த நிதி உதவியின் மூலம் நிறைவேற்றப்படும் பொதுக் கட்டுமான திட்டங்களில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் எஃகு ஆகியவை அமெரிக்காவில் தயாரானவையாக இருக்க வேண்டும் என்கிற விதியானது, மிகமோசமான சமிக்ஞைகளை உலகுக்கு அனுப்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை மூலம் தடைகளற்ற சுதந்திர வர்த்தகம் கைவிடப்பட்டு, பொருளாதார ரீதியிலான இரும்புத்திரை ஒன்று உருவாவதாக வர்ணித்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் இதற்கு எதிரான தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!

1 euro = 148.31sl / 63.44in
1us $ = 113.88 sl / 48.71in
1swiis fr = 99.40sl / 42.52in
1uk pound = 163.59sl / 69.98sl

Leave a Reply

Your email address will not be published.