விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும்’- இணைத்தலைமை நாடுகள்

இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதிகளில், பொதுமக்களின் உயிர்ச் சேதங்களை தவிர்ப்பதற்காக, விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளன.

விடுதலைப் புலிகள் தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பை, இழப்பதற்கு ஒருவேளை இன்னும் சிறிது காலமே இருக்கலாம் என்று கூறியுள்ள அந்த நாடுகள், இதற்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவது பயனற்றது என்பதை விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்புமே உணர வேண்டும் என்றும் கூறியுள்ளன.

மோதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவும் வகையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் இந்தக் குழு கோரியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது எறிகணை தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவை கோரியுள்ளன.

Source & Thanks : ww.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.