இரான் முதல் செயற்கைக் கோளை ஏவியது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாக இரான் அறிவித்துள்ளது.

தொலை தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஓமிட் எனும் செயற்கைக் கோளை ஏவிய ராக்கெட்டின் படங்களை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் தொழில் நுட்பத்துக்கு நிகராக இருக்கும் இரானின் இந்த தொழில்நுட்பம் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது.

இவ்வாறாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதன் மூலம் உலகுக்கு ஒரு சமாதானச் செய்தியை தாங்கள் விடுத்துள்ளதாக இரானிய அதிபர் மஹ்மூட் அஹ்மதிநிஜாட் தெரிவித்துள்ளார்.

தனது அணுசக்தி அபிலாஷைகள் குறித்து மேற்குலக நாடுகளுடன் இரான் மோதி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரானின் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு முப்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்படும் நாளன்று இரான் இவ்வாறாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ள செய்திகள் வந்துள்ளன.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.