பாக்.,கில் வி.ஐ.பி.,க்களுக்காக ரூ.600 கோடியில் ஹெலிகாப்டர்

இஸ்லாமாபாத் : வி.ஐ.பி.,க்களுக்காக பாகிஸ்தான் அரசு, 600 கோடி ரூபாய் செலவில் ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி:பாகிஸ்தானில் ஏராளமான மக்கள், தங்கள் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற வழியில்லாமல் வறுமையில் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக, 600 கோடி ரூபாய் செலவில், ஐந்து ஹெலிகாப்டர்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வி.ஐ.பி.,க்களுக்கும், மூன்று ஹெலிகாப்டர்கள் அவசர கால பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, வடமேற்கு மாகாண கவர்னர் பயணம் செய்வதற்காகவும் அம்மாகாண நிர்வாகம் சார்பில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கப்பட உள்ளது. சாதாரண மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில், மக்களின் வரிப் பணத்தை வி.ஐ.பி.,க்களுக்காக செலவழிப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இதுகுறித்து பாக்., அமைச்சரவை முன்னாள் செயலர் கியாசுதீன் கூறுகையில்,”ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான “ஆர்டர்’ கிலானி பிரதமராக பதவியேற்பதற்கு முன் கொடுக்கப்பட்டது’ என்றார்.இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.