புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் பலி!

புலிவீரர்களின் ஊடறுப்புத் தாக்குதலில், புதுக்குடியிருப்புக் களத்தில் பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளாகிய இன்று, புதுக்குடியிருப்பு நகரில் வாளேந்திய சிங்கக் கொடியை ஏற்றும் திட்டத்துடன், பெரும் படையெடுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சிறீலங்கா படைகள் மீது, கடந்த 1ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் மின்னல்வேக ஊடறுப்புத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இதில், பல நூற்றுக்கணக்கில் சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டு, மேலும் பன்மடங்கு படையினர் படுகாயமடைந்து களமுனைகளை விட்டு அகற்றப்பட்டிருப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான படையினரின் சடலங்கள், களமுனைகளில் சிதறுண்டு கிடக்கின்றன.

இதுவரை, யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் பதினைந்து படைய ஊர்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டிருப்பதோடு, பெரும் தொகையான போர்க் கருவிகள், புலிவீரர்களின் வசம் வீழ்ந்துள்ளன.

யுத்த வெற்றிகளின் மமதையில் சுதந்திர நாளை சிங்கள தேசம் கொண்டாடும் நிலையில், பல நூற்றுக்கணக்கான சிறீலங்கா படையினரின் புதைகுழியாக புதுக்குடியிருப்புக் களம் மாறியுள்ளது.

இதனிடையே, கடந்த வெள்ளி – சனி ஆகிய நாட்களில் மட்டும், வன்னிக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில், இருநூறுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.