ஈழத்தில் போர்நிறுத்தக்கோரி தேனியில் பள்ளிமாணவர்கள் தற்கொலை முயற்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்கள் இன்று காலை இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டனர். இதற்காக சக மாண்வர்களைத் திரட்டிய வேளையில், அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இம் மாணவர்களைத் தடுத்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டால், பள்ளியிலிருந்து நீக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த அம்மாணவர்கள் இருபது பேரும் தங்கள் மனவுணர்வை கடிதமாக எழுதி வைத்துவிட்டு, அரளி விதை அரைத்துக் குடிக்க முற்பட்டனர். அன்பு, அழகன், சியாம் ஆகிய மூன்று மாணவர்கள் அரளி விதைக் கரைசலைக் குடித்துவிட்டனர். பிற மாணவர்கள் குடிக்கும் முன்னர், அருகே இருந்தவர்கள் பார்த்துத் தடுத்துவிட்டனர்.

விசம் அருந்திய மூன்று பேரையும் உடனடியாக பெரியகுளம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோரும் பொதுமக்களும் மருத்துவமனையில் பெருந்திரளாகக் கூடினர். பள்ளித் தலைமையாசிரியருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், இம் மூன்று மாணவர்கள் மீதும் பெரியபாளையம் காவல்துறை ‘தற்கொலை முயற்சி’வழக்குப் பதிவு செய்துள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.