“பந்த்” ற்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிப்பு

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள “பந்த்” ற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் பெப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.