சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவை விசாரிக்க செபிக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி : நாளை விசாரணை துவங்குகிறது

புதுடில்லி : சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவை விசாரிக்க செபிக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவிடம் விசாரணை நடத்த, அனுமதி கேட்டு செபி – பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம், சுப்ரிம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

செபி சார்பில் சட்டவல்லுநர் வாஹன்வதி , தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது . மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமலிங்க ராஜூவிடம் செபி விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது . இதனையடுத்து நாளை முதல் விசாரணை துவங்கும் என தெரிகிறது. நாளை முதல் 6ம் தேதி வரை விசாரணை நடை‌பெறுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு ராமலிங்கராஜூவை செபி விசாரிக்க, செபியின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . ராமலிங்க ராஜூவும், அவரது சகோதரர் ராமராஜூவும் சிறையில் உள்ளனர். அவர்களிடம் எத்தனை நாட்கள் விசாரணை நடத்தப்படும் ஆகிய தகவல்களை ‌சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஐதராபாத், 6வது கூடுதல் தலைமை கோர்ட், செபி விசாரிக்கும் அமைப்பு இல்லை என்றும் எனவே செபி விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தது. விசாரணைக்கு பின்னர் , ராமலிங்கராஜூ வின் 7800 கோடி ரூபாய் மோசடியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.