ஐ.நா. அதிகாரியை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்

குவட்டா: பாகிஸ்தானில் உள்ள குவட்டா நகரில் இருந்து தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர் நேற்று தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

ஐ.நா.வின் அகதிகளுக்கான ஹை கமிஷனில் பலுசிஸ்தான் பகுதி தலைவராக இருப்பபவர் ஜான் சொலேக்கி. இவர் நேற்று, பலுசிஸ்தான் தலைநகர் குவட்டாவில் உளள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் காரை மறித்து சராமரியாக சுட்டனர். அதில் டிரைவர் சையத் ஹாஷிம் ரசா துப்பாக்கி பாய்ந்தது. பின்னர் தீவிரவாதிகள் ஐ.நா. அதிகாரியை கடத்தி சென்றனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை நடத்தினர். படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் பாதி வழியில் மரணமடைந்தார்.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியிருக்கும் இந்த பகுதியில் தாலிபான் மற்றும் அல் கொய்தாவினர் அதிகம் இருப்பதால், அவர்கள் கடத்தியிருக்க கூடும் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது கலீத் மசத் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையி்ல், நேற்று காலையில் தீவிரவாதிகள் டிரைவரை கொன்றுவிட்டு, ஐ.நா. அதிகாரியை கடத்தி சென்றுள்ளனர். இது துரதிருஷ்டமானது. எல்லை பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேவையான நடவடிக்கைகளை கால தாமதமின்றி எடுப்போம் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.