இலங்கை இராணுவம் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்கிறது : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை இராணுவம் அப்பாவிச் தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார்.

பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், இலங்கை நிலவரம் மற்றுமொரு காஸா அவலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதற்கான முழுப் பொறுப்பையும் அரச படையினர் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு வெற்றிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பெருமிதம் அடைந்த போதிலும், சொந்த மண்ணின் மைந்தர்கள் பலர் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரொபர்ட் ஏவன்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தென் ஆசிய பிராந்திய வலயத்திற்கான வெளியுறவுத்துறை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகும் செய்திகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீதும் வைத்தியசாலை கட்டடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும், காஸா நிலப்பரப்பில் இடம்பெறும் பேரவலங்களுக்கு நிகரான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks ; tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.