முஷாரப்புக்கு புதிய வேலை கல்வி நிறுவனம் அழைப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை, வாஷிங்டனில் உள்ள கல்வி நிறுவனம் வேலைக்கு அழைக்கிறது.பாகிஸ்தான் நாளிதழில் வெளியான செய்தி:

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உரையாற்றுவதற்காக கடந்த வாரம் முஷாரப் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தின் தலைவரும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதருமான வென்டி சேம்பர்லைன், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற முஷாரப்பை அழைத்துள்ளார்.முஷாரப் இதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், பாகிஸ்தானில் அதிபராக இருந்த அனுபவம் பற்றி புத்தகங்கள் எழுத இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.