மரு‌த்துவ‌ர்க‌ள் நாளை கறுப்பு‌ப் பட்டை அணிந்து போராட்டம்

இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண ஐ.நா.சபை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக சமத்துவத்துக்கான மரு‌த்துவ‌ ச‌ங்க‌த்தை சே‌ர்‌ந்த மரு‌த்துவ‌ர்கள‌் நாளை கறு‌ப்பு‌ப் ப‌ட்டை அ‌ணி‌ந்து ப‌ணி‌க்கு செ‌ல்வ‌ா‌ர்க‌ள் எ‌ன்று அ‌ச்சங்க பொதுச் செயலர் மரு‌த்துவ‌ர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசைக் கண்டித்தும், போரை நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும்,

இலங்கைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண ஐ.நா.சபை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள முழு அடைப்பு வரவேற்கத்தக்கதாகும்.

சமூக சமத்துவத்துக்கான மரு‌த்துவ‌ர்க‌ள் சங்கம் நாளை கறுப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம் நடத்த உள்ளது எ‌ன்று ர‌‌வீ‌ந்‌திரநா‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.