வெளிநாட்டில் வாழும் தமது குடிமக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதியுதவி கோருகிறது சிறிலங்கா அரசு

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் 500 மில்லியன் டொலர் நிதித் தொகையை சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அரை மில்லியனில் இருந்து ஒன்றரை மில்லியன் டொலர்கள் வரை, வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களிடம் நிதி சேகரிக்க முடியும் என நம்புவதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் வீழ்ச்சி காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், பெருந்தெருக்கள், துறைமுகங்கள், மின்சக்தி மற்றும் எரிசக்தி உற்பத்தி உட்பட, உல்லாசத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளவும், அவற்றின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் இந்த நிதியுதவி தேவைப்படுவதாகக் கூறினார்.

வெளிநாட்டில் வாழும் சிறிலங்கா மக்களின் பணத்தை, மத்திய வங்கியின் சேமிப்புக் கணக்கில் இட்டால் தாம் அதற்கு உரிய பற்றுச்சீட்டுக்களை வழங்குவதுடன் ஏனைய நாடுகளில் உள்ள 2 வீத வட்டியைவிட தாம் சற்று அதிகம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்செயலாக சிறிலங்கா பணத்தின் பெறுமதி பலர் எதிர்பார்ப்பது போன்று குறைந்தது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்தாலும் கூட வங்கியிடம் வழங்கிய நிதித்தொகையின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.