உடையார்கட்டு மருத்துவமனையில் தாதி படுகொலை: அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்

எதுவித உதவிகளுமின்றி மிக இக்கட்டான நிலையில் அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உடையார்கட்டு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனைகள் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் பாதிப்படைந்தன.

உடையார்கட்டு மருத்துவமனை மீது விழுந்த எறிகணைகளால் அங்கு பணியாற்றிய மருத்துவ தாதி ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவமனை பகுதியில் குறைந்தது 10 பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.