காலக்கெடுவின் போதும் தொடர்ந்து குண்டுச்சத்தங்கள் கேட்டன – முல்லைத்தீவு மருத்துவ வட்டாரங்கள்

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் இடங்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி அறிவித்த 48 மணி நேர அவகாசம் முடிவடைந்துள்து.

இத்தகைய நிலையில் முல்லைத்தீவு பகுதியில் தற்போது நிலைமை எப்படியுள்ளது என்று அங்கிருக்கும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரியான டாக்டர் சத்தியமூர்த்தியை தமிழோசையின் சார்பில் தொடர்பு கொண்ட போது, பெரும்பாலான மக்களுக்கு இப்படியான ஒரு கால அவகாசம் கொடுத்ததே தெரியவில்லை என்றும், 48 மணி நேர அவகாசத்தின் போதும் தொடர்ந்து குண்டு சத்தங்கள் கேட்டதாகவும், பொது மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் பற்றாக்குறை தங்களுக்கு ஏற்பட்டு இருப்பதால், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக திங்கட்கிழமை தான் சுகாதார செயலருக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பவிருப்பதாகவும் அவர் கூறினார்.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.