ரூ.2,000 கோடிக்கு சத்யத்தை வாங்கிக்கொள்ள ஸ்பைஸ் கம்யூனிகேஷன் விருப்பம்

மும்பை : பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சத்யம் கம்ப்யூட்டர்ஸை ரூ.2,000 கோடிக்கு வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்திருகிறது. கடும் நிதி தட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்திருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்கிக்கொள்ள ஏற்கனவே பெரிய க்யூ நிற்கிறது.

இதில் ஸ்பைஸ் கம்யூனிகேஷனும் சேர்ந்துள்ளது.நாங்கள் சத்யத்தை முழுவதுமாகத்தான் வாங்கிக்கொள்ள விரும்புகிறோம். பகுதி பகுதியாக பிரித்து வாங்க விரும்பவில்லை என்றார் மோடி.சத்யத்திற்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது ரூ.2,000 கோடி பணம். அந்த தொகையைத்தான் நாங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ள முயற்சிக்கிறோம் என்றார் மோடி. சத்யத்தின் பங்குகள் இப்போது, ஏலத்தை பொருத்து ரூ.2 முதல் ரூ.60 வரையில்தான் விலையில் இருக்கின்றன. எனவே நாங்களும் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறோம் என்றார் அவர். சத்யத்தை வாங்குவதற்காக நாங்கள் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் சத்யம் போர்டுக்கு இது குறித்து கடிதமும் எழுதியிருக்கிறோம். ஆனால் அவர்களிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்றார் மோடி. சத்யம் கொடுக்க வேண்டிய கடன் குறித்து தான் கவலைப்படப்போவதில்லை என்று சொன்ன மோடி, பிப்ரவரி 5 ம் தேதி நடக்க இருக்கும் சத்யத்தின் போர்டு மீட்டிங்கில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்தார்.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.