`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (01.02.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன
புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர்.
இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் பெருமளவிலானோர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளjhf mq:fpUe;J fpilf;Fk; nra;jpfs; njuptpf;fpd;wd
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான பிரதேசத்தை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்

.

 

“முரண்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசம் என தாம் கருதும் (அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி உட்பட்ட)பிரதேசங்களுக்குச் செல்வதை குறிப்பாக விடுதலைப் புலிகள் அனுமதிக்கவேண்டும் என்று .நா.செயலாளர் நாயகம் கோரிக்கை விடுக்கிறார்என்று பான் கீ மூனின் ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது

.

 


“வன்னி மற்றும் ஏனைய முரண்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வரும் பொதுமக்கள் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்என்று இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ள .நா. செயலாளர் நாயகம், அவர்களுடைய நடமாடும் சுதந்திரம், அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்படுவதுடன், மனிதாபிமான உதவி முகவர்கள் அவர்களைச் சென்று பார்வையிடும் வசதி செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு இந்தியப் படையினரின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

.

 


இந்திய அதிகாரிகள் இலங்கைப் படையில் இணைந்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விசேட இராணுவப் படையினரினால் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும், மோதல்களின் போது இந்திய படையினர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன

.

 


காயமடைந்த இந்திய படைவீரர்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!
கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றை கனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பிற்கான வாக்குக்களை கனடிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கு வாக்கழிப்பதற்காக கனடிய தொலைபேசி மூலமாகவும் இணையத்தளம் மூலமாக வாக்களிக்க வசதியை செய்யப்பட்டுள்ளது. கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 1 416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம் வெளி நாட்டு உறவுகள் 001 416 260 4005 என்று அழுத்தி அழைப்பை ஏற்படுத்திகொள்ளலாம்.
இணையத்தளம் மூலமாகவும் வாக்குக்களை பதிவு செய்யலாம் .vkJ ,izajsj;jpw;f;Fs; ePq;fs; nry;fpd;w NghJ mjw;f;fhd ,izg;G toa;fg;gl;Ls;sJ www.tamilolli.com
!!!!!!!!!!!!!!!!!!!!
த‌மி‌ழீழவிடுதலை‌ப் பு‌லிக‌ள் பு‌திதாகநிறு‌வியு‌ள்ள ச‌ர்வதேச உறவுக‌ள் துறை‌யி‌‌ன் பொறு‌ப்பாளராக அ‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன் மூ‌த்தபிர‌தி‌நி‌தி செ‌ல்வராசா ப‌த்மநாத‌ன்நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்
எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் அமை‌தி முய‌ற்‌சிக‌ள், மு‌க்‌கிய‌த் தருண‌ங்க‌ளி‌ல் ச‌‌ர்வதேச‌ச் சமூக‌த்துட‌ன் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் தொட‌ர்புக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இ‌னி த‌மி‌ழீழவிடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தர‌ப்‌பி‌ல் செ‌ல்வராசா ப‌த்மநாதன் ப‌ங்கே‌ற்பா‌ர் எ‌ன்று ப‌ல்வேறு ச‌ர்வதேச அமை‌ப்‌புகளு‌க்கு த‌மி‌ழீழவிடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ச‌ர்வதேச உறவுக‌ள் துறை அனு‌ப்‌பி‌யு‌ள்ள கடித‌த்த‌ி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மி‌ழ்நெ‌ட் இணைய‌த்தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது

.

 


!!!!!!!!!!!!!!!
பலதடவைகள் ஷெல், விமானத் தாக்குதல்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் ஆறு கிராமங்கள் மீது நேற்று நடத் தப்பட்ட அகோர ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத்தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 பேர் சிறுவர்கள். 169 பேர் காயமுற்றனர்.புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திரபுரம், உடையார் கட்டு, தேவிபுரம், தேராவில், மூங்கிலாறு, வலைஞர் மடம் ஆகிய கிராமங்கள் மீது பல தடவைகள் ஆங்காங்கே நடந்த தாக்குதல்களால் மக்கள் நாலா பக்கமும் அந்தரித்துச் செய்வதறியாது சிதறி ஓடியதில் மொத்தம் 169 பேர் காயமுற்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!

 

வன்னியில் இருந்து விடுதலைப் புலி கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கி யுள்ள மக்கள் வெளியேறுவதற்கு அவர் களைப் புலிகள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் வியாழக்கிழமை விதித்த 48 மணி நேரக் காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடி வடைந்தது.
இந்தக் காலப்பகுதியில் மொத்தம் 106 பொதுமக்கள் மட்டுமே பாதுகாப்பான பகுதிகளுக்கு வந்து சேர்ந்ததாக பாதுகாப்பு அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.16 சிறுவர்கள் உட்பட 63 பேர் விசுவமடுவில் படையினரிடம் வந்து சேர்ந்தனர் என்றும் மேலும் 43 பேர் படகுகள் மூலம் புல்மோட்டைக்கு வந்து படையினரிடம் சேர்ந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சுநேற்றுத் தெரிவித்தது.இதேவேளை விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் 250,000 பேர் சிக்கியுள்ளனர் என செஞ்சிலுøவைச் சர்வதேச குழு தெரிவித்துள்ளது. ஆனால் 120,000 பேரே சிக்கியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது என்று .பி. செய்தி ஏஜென்ஸி குறிப்பிட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று 31 ஆம் திகதி சனிக்கிழமை வரை 29 பேர் காணாமல் போயுள்ளதாக பிரதியமைச்சர் .இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மரியதாசன் செல்வேந்திரன், சேகர் ரகுராஜ், சின்னையா சுதாகர் ஆகியோர் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காமகோடிகா தாமோதர ஐயர், வீரசிங்கம் சுவர்ணநாதன் ஆகியோர் கடத்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வவுனியா பூந்தோட்டத்தில் வசித்துவந்த பாலராஜ் ராம்பிரகாஷ் (20 வயது) என்ற இளைஞர் இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என அவரது தந்தை பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளார்.
இதேபோல கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு மூன்று வருடங்களாக கொட்டாஞ்சேனையில் தங்கியிருந்த கரவெட்டியைச் சேர்ந்த நாகலிங்கம் பஞ்சலிங்கம் என்ற 35 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை அதிகாலை கடத்திச் செல்லப்பட்டதாக அவரது சகோதரனால் பிரதியமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது.
வெள்ளைவானில் வந்த இராணுவ சீருடை அணிந்த 7 பேரும் பொலிஸ் சீருடை அணிந்த ஒருவரும் , சிவில் உடையில் வந்த ஒருவருமே இவரைக் கடத்திச் சென்றதாக அவரது சகோதரர் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
இலங்கை விவகாரம் தொடர்பில் நீண்டநாட்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தை கனேடிய அரசாங்கம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி, அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை கனேடிய அரசு எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை காலை விடுத்த அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள எம்.பி அல்பினா குவார்னியறி இலங்கையிலுள்ள அப்பாவி மக்கள் இராணுவ நடவடிக்கையால் காடுகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தனது அரசாங்கம் மௌனமாக இருப்பதை தான் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி எம்.பி.யான குவார்னியறி மேலும் தெரிவித்துள்ளதாவது;
இராணுவத்தினரால் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டபோது கனடா அமைதியாக இருந்தது. மருத்துவமனைகள்,பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டபோதும் கனடா அமைதியாக இருந்தது. பலவந்த இடப்பெயர்வுகள், எண்ணிலடங்காத கொடுமைகள் மற்றும் பாரியளவில் காணாமல் போதல்கள் நடைபெற்று வரும் நிலையிலும் கூட கனடா தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கிறது.
அங்கு இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, உண்மையை அறிவதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனேடிய கொன்சவேடிவ் அரசாங்கம் எடுக்கவேண்டுமெனவும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒன்றிணைந்த சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை குவார்னியறியின் மிசிசௌகா நகர வீதிகளில் கூடிய நூற்றுக்காணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய குழுவொன்றையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்?க் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
தலவாக்கலை நகரில் நேற்று சனிக்கிழமை மாலை இரண்டு மணியளவில் இரு அரசியல் குழுவினர் மோதலில் ஈடுபட்டதை தொடர்ந்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து தலவாக்கலை நகரப்பகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டது. அத்துடன் அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
!!!!!!!!!!
நாட்டிலுள்ள எந்தவொரு மாகாணசபைக்கும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் உள்ளூராட்சி அதிகாரங்களுடன் இது காலம்வரை வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே தொடர்ந்தும் இருக்கும் எனவும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படுமா? எனக் கேட்டபோது அமைச்சின் உயர் அதிகாரியொருவர் அரசு எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கமைய மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படவேண்டிய அவசரம் அரசுக்கு ஏற்படவில்லை. தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் கூட மத்திய அரசின் அதிகாரங்களுக்குச் சமமானதாகவே காணப்படுவதாக அரசு கருதுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
விரைவில் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும் வடமாகாணசபைக்கும் ஏனைய மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களே வழங்கப்படுமெனவும் அங்கு கூட பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைமுறையிலுள்ள அதிகாரங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு மாகாணசபைக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் மாகாணசபைகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளை விரைவில் நிவர்த்திப்பது தொடர்பாக தீவிரமாக ஆராயப்பட்டுவருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!
வன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்குவதை காலவரையரையின்றி இடை நிறுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய ஊடகப்பேச்சாளர் கோர்டன்வைஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாகும் .2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் கூடதலானோர்போர்முனைப்பகுதியில் சிறையுண்டிருப்பதால் அந்த மக்களுக்கு எந்தவித உணவு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கோர்டன் வைஸ் தெரிவித்தார்.
கடந்த 27 ஆம் திகதி அமெரிக்கா வழங்கிய நிவாரணப்பொருட்களும் தம்மிடமுள்ள மனிதாபிமான உதவிகளும் களஞ்சியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததால் மாத்திரமே நிவாரண உதவிகளை அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் ஐந்து cடலங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விசுவமடு பிரதேசத்தில் நடைபெற்ற மோதலில் மரணமான புலிகளுடைய cடலங்களே இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
::!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல?ல் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பொதுமக்களை புகைப்படங்கள், வீடியோ படங்கள் எடுப்பதற்கு பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்துள்ளனர்.
மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால் ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் தொடர்பான படங்கள், விபரங்கள் வெளியுலகுக்கு தெரியக்
கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள காயமடைந்த வன்னி மக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்களும் சந்தித்துப் பேசுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் நேற்று மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெற்றுள்ளது.
இப்பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
லண்டன் மில் பாங் எனும் இடத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி, பாராளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை நோக்கிச் சென்றடைந்தது.
தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
!!!!!!!!!!!!!!!
மொன்றியல் நகரிற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள சென் ஜீன் பிரதான வீதியில் நேற்று மாலை 4:00 மணி தொடக்கம் 6:00 மணிவரை ஏழாவது நாளாகவும் இக்கவனயீர்ப்பு நடைபெற்றது.
!!!!!!!!!!!!!!!!!
நாளாந்தம் வகைதொகையின்றி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்காவின் தமிழின அழிப்பை நிறுத்த, நோர்வே அரசாங்கம் செயலில் இறங்க வேண்டுமென்று கோரி நோர்வேயில் நேற்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பினரால் நான்காவது முறையாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வுடன் பங்கேற்றுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!
தாயகத்தில் சிங்கள இனவெறி அரசு கொடுத்த 48 மணி நேர காலக்கெடு முடிவடைய சில மணித்துளிகளில் இருக்கின்றபோதே நியூசீலாந்து வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து சிங்கள அரசிற்கு எதிராக தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா அரசுமேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை நிறுத்தக்கோரியும், சிறீலங்கா அரசிற்கு இந்திய அரசுமேற்கொண்டு வரும் இராணுவ உதவிகளை நிறுத்தக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக பெர்லின் வாழ் தமிழ்மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!
டென்மார்க்கிலுள்ள ஓகூஸ் நகரில் நேற்று 30.01.09 மாலை சிறுவர்பெரியவர் உட்பட பலமக்கள் ஒன்று கூடி மத்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் குருடு ஆகிவிட்டது.அதன் கண்களைத் திறப்பதற்காக தனது உடலில் தீவைத்துக் கொண்ட மானத்தமிழன் மாவீரன் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!
india
ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கிது. 8மணி நேரத்துக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளத்தில் ஊர்வலம் முடிந்தது.
இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்தனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டிருந்தது

.

 

மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முத்துக்குமாருடைய உடல் அங்கே தகனம் செய்யப்பட்டது

.

 


முத்துக்குமாரின் உடல் மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலை சட்டக்கல்லூரி மாணவர்களே தோளில் சுமந்து கொண்டு வண்டியில் ஏற்றினார்கள்

.

 


வாகனத்தின் முன்புறம் பிரபாகரன் படமும், முத்துகுமார் படமும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வாகனத்தின் இரு புறங்களிலும் முத்துக்குமார் தியாகம் குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கட்சிக் கொடிகளை கொண்டு வரவேண்டாம் என்று மாணவர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்

.

 


கட்சி வேறுபாடில்லாமல் வந்திருந்த அனைவரும் கறுப்புக் கொடியை ஏந்தியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்

.

 


முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்திருந்தார்

.

 


இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச்சேர்ந்த வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் உட்பட அரசியல் தலைவர்களும் பாரதிராஜா,மணிரத்னம்,சேரன்,சீமான், செல்வமணி,மன்சூர் அலிகான் உட்பட திரைப்பட உலகினரும் தமிழுணர்வாளர்களும் இலங்கைக்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து ஆவேசமாக கோஷமிட்டபடியே இறுதி ஊர்வலத்தில் சென்றனர்

.

 


முத்துக்குமார் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவம் பதித்த துணி போர்த்தப்படிருந்தது

.

 


பாதி ஊர்வலத்தில் அந்த பிரபாகரன் துணியை எடுத்துவிட்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் வரு‌கிற 4ஆ‌ம் தே‌தி நட‌த்த‌ப்படவு‌ள்ள முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது

.

 


இதுகு‌றி‌த்து‌த் த‌மிழக அரசுவிடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல்

,

 


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில்பி‌ப்ரவ‌ரி 4ஆ‌ம் தேதி அன்று `முழு அடைப்புஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்

.

 


உச்ச நீதிமன்றத் தீர்ப்பி‌ல், தற்போது `முழு அடைப்புநடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், எங்கும், யாரும், `முழு அடைப்புநடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது

.

 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்புநடத்தியதாக, ...தி.மு.. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்புநட‌க்கவில்லை என்பதும், `உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நட‌ந்தது என்பதும்தான் உண்மை

.

 


இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு அடைப்புநடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட‌த் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் த‌மிழக அரசு மேற்கொள்ளும்

.

 


பொதுமக்களுக்கும், போக்குவரத்‌தி‌ற்கும், அத்தியாவசியப் பொரு‌ட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறதுஎ‌ன்று கூறப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!
த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் அரசு, த‌னியா‌ர் க‌ல்லூ‌ரிகளையு‌ம் அதனோடு இணை‌ந்தவிடு‌திகளையு‌ம் மறு உ‌த்தரவு வரு‌ம் வரை‌யி‌ல் மூடு‌ம்படி த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது

.

 


இலங்கை‌த் த‌மிழ‌ர்களை‌ப் பாதுகா‌‌க்க இ‌ந்‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், அ‌ங்கு போ‌ர்நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்றும் வ‌லியுறு‌த்‌தி த‌மி‌ழ்நாடு முழுவது‌‌ம் அரசு, த‌‌னியா‌ர் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் படி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள் கட‌ந்தசில நா‌ட்களாக வகு‌ப்புகளை‌ப் புற‌க்க‌ணி‌த்து‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்

.

 


சேல‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, கோவை உ‌ள்‌ளி‌ட்ட பல ஊ‌ர்க‌ளி‌ல் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌ம் பல இட‌ங்க‌ளி‌ல் க‌ண்டன ஊ‌ர்வல‌ங்க‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது

.

 


மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌ம் நாளு‌க்கு நா‌ள்தீ‌விரமடை‌ந்து வருவதா‌ல், அனை‌த்து‌க் க‌ல்லூ‌ரிகளையு‌ம் அதனோடு இணை‌‌ந்தவிடு‌திகளையு‌ம் உடனடியாக மூடு‌ம்படி த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது

.

 


இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதிவிடு‌த்து‌ள்ள செய்திக் குறிப்பில், “மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்என்று கூறப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
இதய அறுவைசி‌கி‌ச்சை‌க்கு‌ப்பிறகு ஓ‌ய்‌வி‌ல் இரு‌ந்தபிரதம‌ர் ம‌ன்மோக‌ன்சி‌ங் இ‌ன்று காலை அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ அ‌றி‌விய‌ல் கழக மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்துவீடுதிரு‌ம்‌பினா‌ர்

.

 


பிரதம‌ர் இ‌ன்னு‌ம்சில வார‌ங்க‌ளி‌ல் தனது வழ‌க்கமான ப‌ணிகளு‌க்கு‌த்திரு‌ம்புவா‌ர் எ‌ன்று ம‌த்‌திய ந‌ல்வா‌ழ்வு‌த் துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி ராமதா‌ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்

.

 


கட‌ந்த 18 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, முத‌ன் முத‌லி‌ல் இதய அறுவைசி‌கி‌ச்சை செ‌ய்துகொ‌ண்டது முதலே கடுமையாக உட‌ற்ப‌யி‌ற்‌சிகளை இடை‌விடாது கடை‌பிடி‌த்து வ‌ந்ததா‌ல், த‌ற்போதைய அறுவை ‌‌சி‌கி‌ச்சை‌யையடு‌த்துபிரதம‌ர்விரை‌வி‌ல் குணமடை‌ந்து வரு‌கிறா‌ர் எ‌ன்றா‌ர் அவ‌ர்

.

 


இ‌ன்னு‌ம்சில வார‌ங்க‌ள் ஓ‌ய்வெடு‌த்தபிறகுபிரதம‌ர் தனது வழ‌க்கமான ப‌ணிகளு‌க்கு‌த்திரு‌ம்பலா‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளதாகவு‌ம் அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி தெ‌ரி‌வி‌த்தா‌ர்

.

 


பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்சி‌ங்‌கி‌ற்கு கட‌ந்த 24ஆ‌ம் தே‌‌தி மு‌ம்பை ஆ‌சிய இதயநிறுவன‌ம், டெ‌ல்‌லி அ‌‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ அ‌றி‌விய‌ல் கழக‌ம் ஆ‌கிய புக‌ழ்பெ‌ற்றநிறுவன‌ங்க‌ளி‌ன் மரு‌த்துவ‌ர்க‌ள் இதய அறுவைசி‌கி‌ச்சை செ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் 28 ஆ‌ம் தே‌திபிரதம‌ர்தீ‌விர‌க் க‌ண்கா‌ணி‌ப்பு‌ப்பி‌ரி‌வி‌ல் இரு‌ந்து சாதாரண‌ப்பி‌ரி‌வி‌ற்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர்.
!!!!!!!!!!!!!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோ‌ரி‌ன் உருவ‌ பொ‌ம்மையை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் த‌மிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர் கே.‌வி.தங்கபாலு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்
செ‌ன்னை‌
ச‌‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் மேலிட பார்வையாளர் கே.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சி வளர்ச்சி பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

.

 


இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ற்குபி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கே.‌வி.தங்கபாலு, கடந்த இரண்டு நாட்களாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் சோனியா, ‌பிரதம‌ர் மன்மோகன் சிங் உருவ‌ப்படங்கள் எரிக்கப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர்

.

 


சோனியா கா‌ந்‌தி, பிரதமர் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் சம்பந்தப்பட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்ட த‌ங்கபாலு, இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக காங்கிரஸ் கட்சி பல தியாகங்களை செய்து உள்ளது எ‌ன்று‌ம் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதால் எந்த சாதனையையும் நிகழ்த்த போவதில்லை எ‌ன்றா‌ர்

.

 


உலக அளவிலும், இந்திய அளவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்க‌ம் எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்றா‌ர்

.

 


இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ்கா‌ந்‌திஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளா‌ர். விடுதலைப் புலிகளை திருமாவளவனு‌ம், வைகோவும் தான் ஆதரிக்கின்றனர். விடுதலைப்புலிகளை எங்களுக்கு தெரியவே தெரியாது என்று என் முன்பு ராமதாஸ் தெரிவித்தார் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றினா‌ர்

.

 


தி.மு., காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, விடுதலைப் புலிகளை ஆதரிப்பது இல்லை என்ற கருத்தில் காங்கிரசும், தி.மு..வும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது எ‌ன்றா‌ர்.
!!!!!!!!
இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள்சி‌ங்கள ராணுவ‌‌த்தா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌த்து‌ம், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியு‌ம் செ‌ன்னை உய‌‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 2வது நாளாக New;Wk; நீதிமன்ற புறக்கணிப்பு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர்

.

 


இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறித் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலியு றுத்தி நே‌ற்று முதல் காலவரையற்ற ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பை வழக்கறிஞர்கள் தொட‌ங்‌கின‌ர். தமிழ்நாடு வழ‌க்க‌றிஞ‌ர் சங்கம், சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கம் ஆகியவை இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டத்தை துவக்கியது

.

 


சென்னை உயர் நீதிமன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கத்தினர் 2வது நாளாகNew;Wநீ‌திம‌ன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் உயர் நீதி மன்ற பணிகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!
ஐரோ‌ப்‌பியநிறுவன‌ம் ஒ‌ன்‌றி‌ற்காக இ‌ந்‌தியவி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சிநிறுவன‌ம் (இ‌ஸ்ரோ) ‌வி‌ண்‌ணி‌ல் ஏ‌விய தகவ‌ல் தொட‌ர்பு தெய‌ற்கை‌க்கோ‌ள் W2M, அத‌ன்மி‌ன்க‌ட்டமை‌ப்‌பி‌ல் கோளாறு ஏ‌ற்ப‌ட்டதா‌ல், ஏவ‌ப்ப‌ட்டு 6 வார‌ங்களு‌க்கு‌ள்கி‌ட்ட‌த்த‌ட்ட செய‌லிழ‌ந்து‌வி‌ட்டது

.

 


இ‌ந்த‌த் தோ‌ல்‌வி இ‌ஸ்ரோ‌வி‌ற்கு ஒருபி‌ன்னடைவு எ‌ன்று கருத‌ப்படு‌கிறது

.

 


இதுகு‌றி‌த்து‌, இ‌ஸ்ரோ‌வி‌ன் மூ‌த்த அ‌திகா‌ரி ஒருவ‌ர் கூறுகை‌யி‌ல், “பா‌தி‌ப்புதீ‌விரமானது. இதை‌ச் ச‌‌ரி செ‌ய்வத‌ற்கான வா‌ய்‌ப்புமிகமிக‌க் குறைவாகவே உ‌ள்ளது.எ‌ங்களு‌க்கு ஏற‌க்குறைய ந‌ம்‌பி‌க்கை போ‌ய்‌வி‌ட்டது. பா‌தி‌ப்‌பி‌ல் இரு‌ந்து செய‌ற்கை‌க்கோ‌ள்மீ‌ண்டு வருவத‌ற்கான வா‌ய்‌ப்பு 10 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே உ‌ள்ளதுஎ‌ன்றா‌ர்

.

 


W2M செய‌ற்கை‌க்கோ‌ள் யூடெ‌ல்சா‌ட் க‌ம்யூ‌னிகேசன்‌ஸ்நிறுவன‌த்‌தி‌ற்காக ஐரோ‌ப்பா‌வி‌ன் EADS ‌‌நிறுவன‌த்‌தி‌ன் ப‌ங்க‌ளி‌ப்புட‌ன் வ‌ர்‌த்தக அடி‌ப்படை‌யி‌ல் இ‌ஸ்ரோவா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது ஆகு‌ம்

.

 


கட‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 20ஆ‌ம் தே‌திவி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட இ‌ந்த‌ச் செய‌ற்கை‌க்கோ‌ள், அத‌ன்மி‌ன்க‌ட்டமை‌ப்‌பி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்‌பினா‌ல், அத‌ன் தயா‌ரி‌ப்பாள‌‌ரின் தேவைகளை‌ப் பூ‌ர்‌‌த்‌தி செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று யூடெ‌ல்சா‌ட் க‌ம்யூ‌னிகேச‌ன்‌ஸ்நிறுவன‌ம் ஏ‌ற்கெனவே அ‌றி‌வி‌த்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது

.