பிரபல நடிக‌ர் நாகே‌ஷ் காலமானா‌ர்

பிரபல த‌மிழ் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர் நாகே‌ஷ் இ‌ன்று காலை சென்னையில் காலமானா‌ர். அவரு‌க்கு வயது 76.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது உயிர் இன்று பிரிந்ததாக நாகேஷ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவும் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரத்திற்கு வலு சேர்த்தவர் நாகேஷ். மறைந்த நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உட்பட முன்னாள் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது, இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த போதிலும், பின்னாளில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். சில படங்களில் வில்லன் பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார்.

‘நீ‌ர்‌க்கு‌மி‌ழி’ என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

நகைச்சுவை வேடம், வில்லன், குணச்சித்‌திர வேடம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நாகேஷ் நடித்துள்ளார்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.