இலங்கையில் யுத்தப் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியில் அனுப்ப இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய அவகாசத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அங்கு போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், ஆனால், அங்கு அகப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள இரண்டரை லட்சம் மக்கள் மோதல் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழியை வழங்குவதாக உறுதி கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அடுத்த 48 மணித்தியாலத்தினுள் விடுவிக்கும்படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை அறிக்கையொன்றின் மூலம் புலிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தற்போது மோதல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் புலிகள் அமைப்பினர் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் அவர்ளின் சுதந்திரமான நடமாட்டத்திற்காகவும் அவர்களின் பாதுக்காப்பினை உறுதிசெய்யும் நோக்குடன் அவர்களை அடுத்த 48 மணிநேரத்திற்குள் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.