இந்த ஆண்டில் 93 கிளைகள் துவங்கப்படும்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் தகவல்

சென்னை: ”இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த ஆண்டில் மேலும் 93 கிளைகளை நாடு முழுவதும் துவக்கவுள்ளது. ஆந்திரா வங்கி மற்றும் பரோடா வங்கியுடன் இணைந்து விரைவில் மலேசியாவில் கிளை துவக்கப்படும்,” என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் பட் தெரிவித்தார்.

இதுகுறித்து வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ. பட் கூறியதாவது:வங்கியின் ஒட்டு மொத்த சர்வதேச வர்த்தகம் கடந்த 2007ம் ஆண்டை விட 21.86 சதவீதம் அதிகரித்து ஒருலட்சத்து 62,575 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; வெளிநாட்டு முதலீடு 15.33 சதவீதமாகவும், முன்பணம் 31.28 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் இயக்க லாபம் இந்தாண் டில் 25.73 சதவீதம் அதிகரித்துள்ளது. தற் போது முடிந்துள்ள மூன்றாம் காலாண் டில், கடந்தாண்டு இதே மூன்றாவது காலாண்டை காட்டிலும் 75.98 சதவீதம் வங்கியின் இயக்கலாபம் அதிகரித்துள் ளது; நிகரலாபம் 26 சதவீதம் அதிகரித்துள் ளது.வங்கியின் நிகரலாபம் கடந்தாண்டை காட்டிலும் 11.94 சதவீதம் உயர்ந்து 1003.42 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் 28.45 சதவீதம் அதிகரித்து 8102.21 கோடியாக உயர்ந்துள் ளது. தற்போது வங்கியில் மிகப்பெரிய தொகை முதலீடு செய்வது குறைந்துள் ளது. மேலும் கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவை அதிகளவில் வழங்கப்படுகிறது. தற்போது, இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மீச்சுவல் பண்டு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்படுகிறது. வங்கியின் சார்பில் வெளிநாடுகளில் துவக்கப் பட்டுள்ள கிளைகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன.நியூசிலாந்தில் புதிய கிளை துவக்கப்பட உள்ளது; ஹாங்காங், சிங்கப்பூர், பேங்க்காக்கில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன; ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் கிளைகள் துவக்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து புதிய நிறுவனம் துவக்கப்பட்டு அதன் மூலம் மலேசியாவில் வங்கி துவக்க திட்டமிட்டுள்ளோம்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார் பில், தற்போது 1,842 கிளைகள் உள்ளன. இவற்றில் 1,500 கிளைகள் ‘கோர் பாங் கிங்’ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள் ளது. மற்ற கிளைகள் அனைத்திலும் இந்தாண்டு இறுதிக்குள் இந்த வசதி கொண்டுவரப்படும். இந்தாண்டில் 93 கிளைகள் துவக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் ‘ மைடாஸ் கட்டமைப்பு’ பிரிவிற்கு முதலில் 50 கோடி ரூபாய் நிதி அளித்தோம். தற்போது அது 94 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு பட் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.