உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்காவின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோர் விவரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டுப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு ஆசிரியை, ஒரு சிறுமி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் வியாழக்கிழமை நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:

மனோறஞ்சிதமலர் என்ற கல்லூரி ஆசிரியை

செ.புஸ்பராஜா (வயது 23)

இ.சிவதயாளினி (வயது 15)

பு.பரமேஸ்வரி (வயது 32)

இத்தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:

கி.துளசிகா (வயது 03)

கலைஞன் (வயது 07)

குகவதனி (வயது 12)

து.தயாபரன் (வயது 23)

கி.கரன் (வயது 22)

க.மகேந்திரன் (வயது 53)

பே.சண்முகராஜா (வயது 28)

வள்ளியம்மை (வயது 55)

சாரதாதேவி (வயது 37)

செல்வராஜா (வயது 58)

சின்னப்பிள்ளை (வயது 73)

கு.நாதன் (வயது 34)

சசிசந்திரன் (வயது 24)

சிவபாதம் (வயது 72)

பு.துஸ்யந்தன் (வயது 21)

கோ.கிருபாதேவி (வயது 50)

ஆ.மங்களேஸ்வரன் (வயது 37)

கு.யூட் அன்ரனி (வயது 31)

ம.சரியமலர் (வயது 45)

மேலும், நேற்று வெள்ளிக்கிழமை பகல் 1:00 மணியளவில் தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இராமு சிவதயாளினி (வயது 15) என்ற சிறுமி கொல்லப்பட்டார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.