மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

லண்டன் : கடந்த வருடம் நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். 10 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 178 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. பல்வேறு ஆதரங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை மும்பை தக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் , இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதாது என்றும் சொல்லி வருகிறது. இந்நிலையில் லண்டனில் பாகிஸ்தான் ஐ கமிஷனர் சம்சூல் ஹசன் மும்பை தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மும்பை தாக்குதலுக்காக பாகிஸ்தான் ஒரு போது திட்டம் தீட்ட வில்லை. இந்த தக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என எங்களுக்கு தெரியும். இது விரைவில் விசாரணை நடத்துபவர்களுக்கும் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.