ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக உ‌யி‌ர்க்கொடை செய்த முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வணக்கம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று ‌தீ‌க்கு‌ளி‌த்து உ‌யி‌ர்க்கொடை செ‌ய்த இளைஞ‌ர் முத்துக்குமாருக்கு அர‌சிய‌ல் தலைவ‌ர்கள‌், மாணவ‌ர்க‌ள் உட்பட ப‌ல்வேறு தர‌ப்‌பின‌ர் வணக்கம் செலு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

முத்துகுமாரின் புகழுடலுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்

திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

திரைப்பட நடிகர் டி.இராஜேந்தர்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலர் தமிழிசை சௌந்தரராஜன்

உட்பட ஏராளமானவர்கள் வணக்கம் செலுத்தினர்.

முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உட்பட ஏராளமான தமிழ் அமைப்புக்கள் விரிவான ஏற்பாடுகள் செ‌‌ய்து‌ள்ளன.

முத்துக்குமாரின் புகழுடலுக்கு அனைத்துத் தரப்பினரும் வணக்கம் செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.

நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமாரின் புகழுடல் எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் புகழுடலுக்கு இன்று வணக்கம் செலுத்தினர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவர்களும் வணக்கம் செலுத்தின‌ர்.

இதேபோ‌ல் பல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமாரின் புகழுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தின‌ர்.

விஜயகாந்த் கட்சி சார்பில் சுதீஷ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார்.

முத்துக்குமாரின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

இன்று மாலை முத்துக்குமாரின் புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படு‌‌கிறது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.