நட்டத்தில் ஜப்பானிய மின்னணு நிறுவனங்கள்

உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் மேலும் ஒரு உதாரணமாக, ஜப்பானின் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றான சோனி, கடந்த காலாண்டில் தனது இலாபத்தில் 95 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.


இதே போன்று மற்றொரு பெரு நிறுவனமான டோஷிபா நிறுவனமும் வரும் மார்ச் மாதம் முடியும் இந்த நிதியாண்டில் தமக்கு மூன்று பில்லியன் டாலர்கள் அளவுக்கு நட்டம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

டோஷிபா நிறுவனத்தில் இந்த ஆண்டு 4.500 பேர் வேலையிழக்கிறார்கள். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குறைவான தேவையும், மதிப்பு உயர்ந்து வரும் ஜப்பானிய நாணயமான யென்னும், ஜப்பானிய பொருளாதாரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஜப்பானின் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.