2006ம் ஆண்டு விலையில் பெட்ரோல்: முரளி தியோரா தகவல்

புதுடில்லி: ‘கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இரண்டு முறை குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது’ என, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.

ரேபரேலியில் நடந்த விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, ‘விரைவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும்’ என அறிவித்தார்.அவர் இவ்வாறு பேசிய அடுத்த நாளே பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை இரண்டு ரூபாயும், சமையல் காஸ் விலை 25 ரூபாயும் குறைக்கப்பட்டது.இந்த விலை குறைப்பு தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் தற்

போதைய விலை, 2006 ஜூனில் இருந்த விலை யை விட குறைவு.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என பொதுமக்களுக்கு அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்த விலை குறைப்பு, சாதாரண மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

இவ்வாறு முரளி தியோரா கூறினார்.பெட்ரோலிய செயலர் பாண்டே கூறுகையில், ‘சுங்கம் மற்றும் கலால் வரியை அதிகரிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ‘எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டபோது அரசு தரப்பில் பத்திரங்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம் இழப்பை சமாளிக்க முடிந்தது. இது போல் அரசு மேலும் சில நடவடிக்கைகளை மேற் கொள்ளும்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.