620 பேருக்கு வேலை இது தான் டாடா

ஜாம்ஷெட்பூர்: எட்டு மாதத்திற்கு முன், வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட 620 ஊழியர்களை திரும்ப அழைத்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.ஜாம்ஷெட்பூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்தத் தொழிற்சாலையில் உள்ள ஐந்து பிரிவுகள், 10 வாரங்களுக்கு முன் மூடப்பட்டன.

இதனால், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 620 ஊழியர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்.ஆனால், தற்போது தொழிற்சாலையின் உற்பத்தி மேம்பட்டிருப்பதாலும், மூடப்பட்ட ஐந்து பிரிவுகளும் பிப்ரவரி 2ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்பதாலும், வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட 620 ஊழியர்களும் அன்றைய தினம் மீண்டும் பணிக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.