திருமலையில் சிறிலங்கா படையினர் – விடுதலைப் புலிகள் நேரடி மோதல்

திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற நேரடி மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

நிலாவெளிப் பிரதேச வனப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேரடி மோதல் நடைபெற்றது.

இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Source & Thanks ; puthinam.com

Leave a Reply

Your email address will not be published.