(2ம் இணைப்பு)இந்தியா இப்போதும் மௌனியாக இருக்குமா? மீண்டும் மக்கள் மீது சிங்கள கொடும் படை தாக்குதல்: 44 பேர் படுகொலை; 178 பேர் படுகாயம்!

சிறிலங்கா படையினர் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு- மாணிக்கபுரம்- சுதந்திரபுரம்- இருட்டுமடு- றெட்பானா மற்றும் மூங்கிலாறு உள்ளிட்ட பல பகுதிகளை நோக்கி இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 178 பேர் காயமடைந்துள்ளனர்.

[2 ஆம் இணைப்பு: கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் விவரம்]

சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும்

சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

மற்றும் 18 பேரின் உடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் கிடக்கிறது.

சுதந்திரபுரம் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் 17-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிருசா (வயது)

நிவேதன் (வயது 13)

தர்சன் (வயது 17)

நவநீதராஜ் (வயது 12)

யோகேஸ்வரன் (வயது 43)

டில்கானி (வயது 20)

பிறிமன்ட் (வயது 20)

கிருபநாதன் (வயது 58)

புஸ்பவதி (வயது 68)

பமிலா (வயது 24)

ரவி (வயது 32)

விக்னேஸ்வரன் (வயது 28)

யோசப் (வயது 58)

கிருஸ்ணகுமார் (வயது 23)

யோகேஸ்வரி (வயது 23)

தர்சன் (வயது (18)

உதயகுமார் (வயது 18)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம் 100 வீட்டுத் திட்டம் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விவரம்:

அ.தனுசன் (வயது 11)

த.பற்பம் (வயது 30)

சி.ஈஸ்வரி (வயது 32)

செ.சிறீ றஞசனி (வயது 39)

சு.சதீஸ் (வயது 09)

ச.சாளினி (வயது 10)

ரவி (வயது 29)

முருகேசு (வயது 56)

செ.தனுசன் (வயது 11)

சந்திரகலா (வயது 39)

ப.கனிஸ்டஸ் (வயது 28)

கஜேந்திரகுமார் (வயது 19)

இ.சந்தனம் (வயது 24)

ரவீந்திரன் (வயது 23)

பத்மன் (வயது 30)

மூ.முத்துவேல் (வயது 72)

விமலாதேவி (வயது 43)

இ.பண்டா (வயது 50)

5 அகவை கஜதீபன் (வயது 05)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு பகுதியில் நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் விவரம்:

இராமநாதன் உதயகுமார் (வயது 23)

இராமநாதன் கீர்த்திவர்மா (வயது 14)

எதிர்மன்னசிங்கம் அன்னமலர் (வயது 74)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

றெட்பானா பகுதியில் இன்று காலை 9:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில்

கிருஸ்ணன் கனிசா (வயது 09)

அ.வசந்தி (வயது 33)

அருச்சுனன் யோகேஸ்வரி (வயது 13)

கணேஸ் செல்வன் (வயது 78)

செல்வராசா சதீஸ்கரன் (வயது 08)

மருதலிங்கம் (வயது 49)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதே பகுதியில் பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில்

முருகையா தவமணி (வயது 55) என்பவர் கொல்லப்பட்டார்.

செல்வராசா வரதன் (வயது 23)

ம.யோகராணி (வயது 19)

விஜயரத்தினம் கார்த்திக் (வயது 14)

கிருஸ்ணன் வினோதினி (வயது 07)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீண்டும் இதே பகுதியில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கி.அனுசியா (வயது 17) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உடையார்கட்டு இருட்டுமடு இடம்பெயர்ந்தோர் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், சந்திரசேகரம் சதீபன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்

தி.கிருசாந்தி (வயது 07)

க.தவக்குமார் (வயது 18)

ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.

உடையார்கட்டு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 3 உடலங்கள் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேரி ஜெனிற்றா (வயது 20)

அ.சூசை (வயது 65)

கே.கீதா (வயது 19)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

மூங்கிலாறு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் உடலங்கள் மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதில் து.மதியழகன் (வயது 02) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 19 பேரின் விவரங்கள் கிடைக்கப்பெற்றன. அவை வருமாறு:

மு.நாகலிங்கம் (வயது 55)

வி.வள்ளியம்மை (வயது 60)

மு.சூரியகுமார் (வயது 43)

யோ.யமுனா (வயது 10)

க.ஆறுமுகம் (வயது 40)

ஆ.வசந்தா (வயது 35)

ஆ.நிரஞ்சனா (வயது 04)

பே.துஸ்யந்தி (வயது 09)

சிறீவதனி (வயது 32)

யோ.சர்மினி (வயது 15)

கி.கீதா (வயது 19)

கு.சாந்தி (வயது 29)

சி.சிவாகரன் (வயது 23)

த.வசந்தருபன் (வயது 27)

சி.சுவேந்திரன் (வயது 21)

சித்திரவேலாயுதம் (வயது 60)

சுடரின்பன் (வயது 13)

ஜெயசிங்கம் (வயது 69)

சசியேந்திரன் (வயது 21)

ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று தனக்கு உறுதியளித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் இந்திய அரசும் இதனை பகிரங்கமாக சொல்லி பெருமைப்படும் தமிழக அரசும் ஈழத் தமிழர்கள் கூண்டோடு சாகத்தான் காத்திருக்கின்றனவோ என்னவோ!.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.