மலேசியா: காவலில் இந்தியர் மரணம்

மலேசியாவில் காவல்துறையின் காவலில் இருந்த இந்தியர் மரணம் அடைந்தார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் குகன் (22). மலேசியாவில் வசித்து வந்த இவரை கார் திருடியதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 20ஆம் தேதி காவல்துறை காவலில் இருந்த போது இவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், காவல்துறையினர் அடித்து கொடுமைப்படுத்தியதால் மட்டுமே அவர் இறந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டனர். குகன் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் இறுதி ஊர்வலத்தின் போது கோஷமிட்டனர்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.