பைசா கோபுரம் போல சாயுமா டில்லி குதுப் மினார்*மழைநீர் கசிவால் பாதிப்பு

புதுடில்லி:இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் சாய்ந்து கொண்டிருப்பதைப் போல, டில்லியில் உள்ள குதுப் மினார் கோபுரமும் சாயுமா என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது. அஸ்திவாரத்தை மழைநீர்க்கசிவு அரித்துக் கொண் டிருப்பதால், இந்த ஆபத் தான நிலை ஏற்பட்டுள் ளது.டில்லியில், துக்ளக் ஆண்டகாலத்தில் மூன்று முக்கிய நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று செங் கோட்டை;

இரண்டாவது ஹுமாயுன் கல்லறை. மூன்றாவது, குதுப் மினார் கோபுரம். 1193ல், குத்புதின் இதை கட்டினார். இதன் உயரம் 237 அடி. மொத்தம் 379 படிகளை கொண்டது.பூகம்பம் காரணமாக, சில ஆண்டுகள் முன் கோபுரத்தின் மேல் இரண்டு தளங்கள் லேசாக சாய்ந்தன. அதன் பின், மழைநீர்க்கசிவு காரணமாக, அஸ்திவாரத்தின் பக்கவாட்டில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

இதைத்தடுக்க, அஸ்திவாரத்தை சுற்றி, பக்கவாட்டில், மழைநீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டடத்தின் அடிப்பாகத்தில் சுற்றிலும் கான்கிரீட் கலவை யுடன் சுண்ணாம்பு கலவை சேர்த்து பலப்படுத்தப்பட்டது. மழைநீர் கசிவு ஏற்படாமல் இருக்க, சுற்றிலும், தண்ணீர் ஈர்க்கும் தொட்டிகளும் கட்டப் பட்டன. இதனால், மழைநீர் கசிவு, கட்டத்தின் அடிப்பகுதி மண்ணை அரிப்பதை முடிந்தவரை தவிர்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், சமீப காலமாக, தொடர்ந்து மழைநீர் கசிவு ஏற்பட்டுவருகிறது. இதனால், கோபுரம், முன்பை விட, சாய்ந்த நிலையில் உள்ளது. தென்மேற்கு பக்கமாக 25 அங்குலம் வரை சாய்ந்துள்ளது.கட்டடம் கட்டும் போது, நேராக நிற்கும் வகையில் தான் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்ததும் சில ஆண்டுகளில் லேசாக சாய ஆரம்பித்தது. மண் திடம் இல்லாத காரணத்தால், சாய்வது தொடர்ந்தது. அதன் பின், சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பாலும், கோபுரம் சாய்வது நீடித்தது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில்,”முதன் முதலில் கோபுரத்தில் சாய்வது தொடர்பாக, 1950 களில் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின், பத்தாண்டுகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த குழுவும் கூட சோதனை செய்தது. அதனால், பயப்படும் படி எந்த ஆபத்தும் நேராது’ என்று தெரிவித்தனர்.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.