வட அயர்லாந்தில் இன்னமும் ஆறாத வடுக்கள்

வட அயர்லாந்து ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் தனது இரத்தம் தோய்ந்த கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்க முயலுகிறது.

வட அயர்லாந்தின் தேசியவாதிகளான பெரும்பாலும் கத்தோலிக்க சமூகத்துக்கும், பெரும்பாலும் புரட்டஸ்தாந்து யூனியனிஸ்ட் சமூகத்துக்கும் இடையிலான வன்செயல் மோதல்கள் சுமார் மூன்று தாசப்தங்களுக்கு தொடர்ந்தன.

இந்த மோதல்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஐ. ஆர். ஏ எனப்படும் அயர்லாந்து ரிபப்ளிக்கன் இராணுவம், அரசாங்க ஆதரவு துணைப்படை அல்லது பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் ஆகியோராலேயே இவர்களில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்து இந்த அறிக்கையை தயாரித்த ஆலோசனைக்குழு பொதுமன்னிப்புத்தரும் யோசனையை நிராகரித்துள்ளது, ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு 12,000 பவுண்டகள் வரை நட்ட ஈட்டை வழங்க அது பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1998 இல் கொண்டுவரப்பட்ட புனிதவெள்ளி ஒப்பந்தம், அந்த மோசமான படுகொலைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தது. ஆனால், ஆழமாகிவிட்ட மனப்பிளவு இன்னமும் மாறவில்லை.

Source & Thanks : www.bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.