மிகப்பெரிய பொருளாதார இறங்குமுகத்தில் உலகம்’- நாணய நிதியம்

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குப் பின்னர் இப்போதுதான் உலகம் அதனது மிகவும் மோசமான பொருளாதார இறங்கு முகத்தை எதிர்கொள்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் உலகத்தின் வளர்ச்சி வீதம் வெறுமனே அரை வீதமாக மாத்திரமே இருக்கும் என்று தனது பொருளாதார எதிர்வு கூறலுக்கான அறிக்கையில் அது கூறியுள்ளது.

அத்துடன் மக்கள் தொகை வேகமாக வளர்வதால், ஒவ்வொரு ஆளுக்கான உற்பத்தித் திறனிலும் இறக்கம் காணப்படும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரம் சுருங்குவதுடன், ஏனைய நாடுகளின் வளர்ச்சி சடுதியாக தாமதமடையும் என்றும் நாணய நிதிய எதிர்வு கூறல் குறிப்பிடுகிறது.

2010 ஆம் ஆண்டில்தான் பொருளாதாரம் மீண்டும் மீளத்தொடங்கும் என்றும் அது கூறுகிறது.

ஆனால், கடுமையான கொள்கை நடவடிக்கைகளிலேயே, குறிப்பாக நிதி ஸ்திரமின்மையை மீளச்செய்வதை நோக்கிய நடவடிக்கைகளிலேயே இது தங்கியிருக்கிறது என்று பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்.

Source & Thanks : www.bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.