விடுதலைப் புலிகளிடம் கைப்பற்றிய பிரதேசங்கள் தொடர்பில் பிரணாப் முகர்ஜிக்கு சரத் பொன்சேகா விளக்கம்

பாரிய போர் நடவடிக்கை மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டமை குறித்து சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கமளிக்கும் நிகழ்வு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரைபடங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் சுமார் ஒரு மணிநேரமாக சரத் பொன்சேகா விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சிறிலங்காவின் மூத்த படை தளபதிகள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இது படையினரின் துணிகரமான செயற்பாடு என கூறி பாராட்டியதுடன் மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்ககைக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட கோத்தபாய ராஜபக்ச பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படாத நிலையில் விடுதலை புலிகளுடன் படையினர் போர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இந்தியாவுக்கு திரும்பினார்

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.