இயக்குநர் குழு முடிவுகளால் உயரத்துக்குப் போன சத்யம் பங்குகள்!

மும்பை: அதளபாதாளத்தில் விழுந்து போய், இனி மீள வழியே இல்லை என்ற நிலையிலிருந்த சத்யம் நிறுவனப் பங்குகள் இப்போது கிடுகிடு உயர்வைச் சந்தித்து வருகின்றன.

இன்று மட்டுமே 17 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது சத்யம் பங்குகள்.

இந்நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழு, சத்யத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர… அதாவது சீரமைக்க, முதலீட்டாளர்களைத் தேடிவருகிறார்கள்.

வெளியிடங்களிலிருந்து கடன்பெறும் முயற்சியிலும் உள்ளனர். அதேபோல அரசின் உதவித் தொகை இல்லாமலேயே ஜனவரி மாதச் சம்பளத்தையும் தரும் அளவுக்கு சத்யம் நிதி நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோல்ட்மென் சாக்ஸ் மற்றும் அவென்டஸ் நிறுவனங்களை சத்யம் முதலீட்டு வங்கிகளாக இயக்குநர் குழு அறிவித்துள்ளது. பாஸ்டன் கன்ஸல்டிங் குரூப்பை சத்யம் நிறுவன ஆலோசகர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இப்படி தொடர்ந்து பாஸிட்டிவ் சிக்னல் கிடைத்துவருவதால், சத்யம் பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன.

இன்று காலையிலேயே 17 சதவிகிதம் வரை விலை உயர்ந்து ரூ.55.15-க்கு கைமாறின பங்குகள். சத்யம் சாம்ராஜ்யம் ராமலிங்க ராஜுவால் சரிவு கண்டபிறகு, அதன் பங்குகள் இந்த அளவு அதிக விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை.

Source & Thanks ; thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.