காஸாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்

மத்திய கிழக்கில் காஸா-இஸ்ரேல் இடையிலான எல்லைப் பகுதியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்த சில மணி நேரங்களில் காஸா நிலப்பரப்பில் இஸ்ரேல் வான் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த வான் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் ஒருவர் ஹமாஸ் தீவிரவாதி என்று தெரிகிறது.

கிஸ்ஸுஃபிம் நகர எல்லைக் கடவை மையம் அருகில் இஸ்ரேல் பக்கத்தில் ஒரு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து வான் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து இஸ்ரேலியப் படைகள் சுட்டதில் காஸாவில் பாலஸ்தீன விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மத்தியகிழக்கு சிறப்புத் தூதரான ஜார்ஜ் மிட்செல் இப்பகுதிக்கான விஜயத்தின் முதல் கட்டமாக கெய்ரோ சென்றுள்ள நிலையில் இந்த வன்சம்பவங்கள் நடந்துள்ளன.

Source & Thanks : bbctamil.com

Leave a Reply

Your email address will not be published.