லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரனுக்கு எதிராக கைது வாரன்ட்

கொழும்பு: இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை தொடர்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் மூன்று பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் லட்சுமண் கதிர்காமர். இவர், கடந்த 2005 ஆகஸ்ட் 12ம் தேதி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து விசாரணை நடத்திய, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள், புலித் தலைவர் பிரபாகரன், அவரின் உதவியாளர்கள் பொட்டு அம்மான், சார்லஸ் மாஸ்டர் மற்றும் கோமதி மணிமேகலா ஆகியோரே கொலைக்கு காரணம் என தெரிவித்தனர். உடன், அவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கொழும்பு குற்றப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், “கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய முற்பட்டோம். ஆனால், இலங்கையின் வடக்குப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடப்பதால், அவர்களை கைது செய்ய முடியவில்லை. நான்கு பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கும், ராணுவ கமாண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரபாகரனையும் மற்ற மூன்று பேரையும் கைது செய்ய மீண்டும் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.