தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான மாதிரி கடிதம் – 2

உலக தமிழினத் தலைவரும்,
தமிழினக் காவலருமாகிய,
மாண்புமிகு முதல்வர்,
கலைஞர் கருணாநிதி அவர்களே,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் ஈழத் தமிழனின் கண்ணீர் மனு!!!!
“யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்”

முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி ஓடிச் சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை.பதுங்கு குழிகளே கல்லறைகளாகிவிட்டன ஐயா.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் – உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கெடுத்து உரைப்போம்.

கலைஞரே எம் காவல் தலைவரே,ஐயா

நீங்கள் எங்களுக்காக ஆட்சி இழந்து சிறை சென்ற பெரும் தலைவர். இன்று கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ஐயா

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

உங்கள் பெயர்

நன்றி www.TamilOosai.com

http://tamiloosai.com/index.php?option=com…8&Itemid=75

எம் அன்பிற்கினிய மக்களே இபொழுதே மின்னஞ்சல் அல்லது தொலைநகல் அனுப்புங்கள்

தொலைநகல் விரும்பத்தக்கது

கலைஞர் தொலைநகல்:0091 44 281 11133
கலைஞர் மின்னஞ்சல்: cmcell @ tn . gov . in ( [email protected] )
கலைஞர் இருப்பிடம் : 00 91 44 281 15225
கலைஞர் அலுவலகம்: 00914425672345

Leave a Reply

Your email address will not be published.