தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான மாதிரி கடிதம்

To: [email protected], [email protected]
Cc: [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected], [email protected]

அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே,
தமிழினத் தலைவரும் தமிழினக் காவலருமாகிய மாண்புமிகு முனைவர் கருணாநிதி அவர்களே,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் புலம் பெயர் தமிழனின் கண்ணீர் மனு!!!!

பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.

தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் – உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கேடுத்து உரைப்போம். .

நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.

இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ………………

நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்
புலம் பெயர் ஈழ தமிழன்

Source : yarl.com

Leave a Reply

Your email address will not be published.