வன்னி யுத்தம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை திரட்ட புரூஸ் பெய்ன் சென்னைக்கு திடீர் விஜயம்

அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபரும், அமெரிக்க தமிழர் அமைப்பின் சட்ட ஆலோசகருமான புரூஸ் பெய்ன் தமிழீழ விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கில் அண்மையில் சென்னைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் தற்போது இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து புரூஸ் பெய்ன் தகவல்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இயக்கும் மெக்ஸ் பவுண்டேசன் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் அழைப்பின் பேரில் பெய்ன் சென்னைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை அரச படையினருக்கு எதிராக தமிழக புலி ஆதரவாளர்களிடம் சாட்சியங்களை திரட்டுவதற்காக பெய்ன் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் சுமார் 189 இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும், இவை அகற்றப்பட வேண்டும் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இவர் மிகவிரைவில் கோத்தபாய, இராணுவத் தளபதி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.