`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (27.01.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தமக்கள் பாதுகாப்பு வலயமானபுதுக்குடியிருப்புசுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடுஉடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு இலட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.
கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலானோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும்கியூடெக்நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
!!!!!!!!!!!!!!!!!
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ரி.வரதராஜா அவர்கள் சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், .நா.சபை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு காயமடைந்த பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருந்துப் பொருட்களையும், மருத்துவ பணியாளர்களையும் அவசரமாக வினியோகிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அனுப்பிய செய்தியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 300 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 1000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையான மருந்துப் பொருட்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அனுப்பியுள்ளார்.
!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை செல்லும் அவர், அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்தித்திக்கவுள்ளார்.
இருவரையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்துவார் என இந்திய தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்ற
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின்படை நடவடிக்கையை தடுப்பதில்லை என்பதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதாக, அனைத்துலக செய்தி ஊடகமான றொயிற்றர்ஸ் (reuters) தகவல் வெளியிட்டுள்ளது.
“சிறீலங்காவால் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்களா?” என்ற தலைப்பில் வன்னியின் தற்போதைய நிலை பற்றியும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் C. Bryson Hull எழுதியுள்ள ஆய்வுப்பத்தியில், இலங்கை போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் அம்பலப்படுத்தியுள்ளார்
!!!!!!!!!!!!!!!
வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
“எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது” என பா.நடேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது, “எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்” என தெரிவித்த அவர்,
“இவ்வாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார். என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார்.
இணைய சஞ்சிகை ஒன்றுக்கு மகிந்த பேட்டி அளித்ததாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி, அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஜெயராம் வன்னி பிரதேசத்திற்கு பயணம் செய்து அங்கு மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோர வேண்டும்.
பொதுமக்களை ஆயுதமுனையில் தடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வரும் புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும்.
கருணாநிதி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த விரும்புவாரானால் அவர் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு புலிகளிடம் பகிரங்கமாக கோரவேண்டும். அப்படியானால் சிறிலங்கா அரசாங்கமும் கருணாநிதியும் முன்மொழியும் ஒரு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையில் அதனைச் செய்ய முடியும் .
கருணாநிதி சிறிலங்கா வரும்போது அவரோடு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவையும் கூட தன்னோடு கூட்டிவர முடியும். அப்பாவி தமிழ் மக்களை தமது இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் புலிகளிடம் அவர்களை விடுவிக்குமாறு கோர வேண்டும்.
இலங்கையில் நடைபெறும் உண்மையான நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிழையான வழிநடாத்தல்களுக்கு தமிழகத் தலைவர்கள் உட்பட வேண்டாம் என மகிந்த கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!
சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்திருப்பது பாரிய போர்க் குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
:தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாக பயன்படுத்தவில்லை. ஆனால், இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா படையினரிடம் இருந்து தப்பி தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக போராடும் புலிகளின் பகுதிகளை நோக்கியே அவர்கள் வருகின்றனர்.
வன்னி நிலைமைகளை அவதானிக்க ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தவறிவிட்டன.
சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் மக்கள் பாதுகாப்பு வலயங்களில் எதுவித அடிப்படை வசதிகளுமே இல்லை.
இந்த பாதுகாப்பு வலயங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ நம்பவும் இல்லை.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களில் ஒருவரும் படுகாயமடைந்திருக்கின்றார்.
அனைத்துலக சமூக அமைப்புக்கள் போரை உடனே நிறுத்தி பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் பா. நடேசன்.
!!!!!!!!!!!!!!!!!!
சுதந்திர தினமன்று இலங்கை முழுவதிலும் தேசிய கொடி பறக்கவிடப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களிலும் சிங்கக் கொடி பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எதுலாகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் நாள் தூரத்தில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கைது செய்வோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
முல்லைத்தீவில் ஒரு சிறு பகுதிக்குள்தான் பிரபாகரன் உள்ளார். அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாமலேசியா ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் பிரபாகரனுக்கு எதிராக இருப்பதால் முதலில் சிறிலங்காவில்தான் விசாரணைக்கு உட்படுத்துவோம்.
பிரபாகரன் கைது செய்ப்பட்ட பின்னர் இந்த இரு நாடுகளுக்கும் தகவல் தெரிவிப்போம் என்றார் அவர்.
!!!!!!!!!
இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் மேலும் மூவரையும் தடுத்து வைப்பதற்கான பிடியாணை ஒன்று நேற்று பிறப்பிக்கப்பட்டது. வெளிவிவகாரத்துறைக்கான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பதன் காரணமாகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்க பிறப்பித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், சார்ள்ஸ், கோமதி மணிமேகலை ஆகியோரைக் கைது செய்யுமாறே நீதியரசர் உத்தரவிட்டார். லக்ஸ்மன் கதிர்காமாரின் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வடக்கில் இடம்பெறும் நடவடிக்கைகள் காரணமாக இவர்களைக் கைது செய்யக் கூடியதாகவிருக்குமெனப் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இவர்களைக் கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.!!!!!!!!!!!!
யுத்த பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்குமாறு .நா. செயலாளர் பான் கீ மூன், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகமாக இடம்பெறும் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் மற்றும் மனிதபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதிக பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.நா. செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில்,

பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் மருத்துவ நெருக்கடிகள், பிள்ளைகளின் பாடசாலை வசதிகள் இல்லாமை மற்றும் மனிதாபிமான உதவிகள் இன்றித் தவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்து வாழும் 250,000 பேருக்கு மனிதபிமான் உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும்.

‘தாக்குதல் வலயங்களைத் தவிர்த்துபாதுகாப்புப் பிரதேசங்களைஏற்படுத்துங்கள். தாக்குதல் பிரதேசங்களில் தவித்துக் கொண்டிருக்கும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!
.நா.பேச்சாளர் மாரி ஒகாபே தெரிவிக்கையில்,

“எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வடக்கின் மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளில் .நா. பணியாளர்கள் மனிதாபிமான சேவைகளை ஆற்றி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சுமார் 5000 பேர் விடுதலைப் புலிகளின் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளனர்.

.நா. அகதிகள் நிறுவனம் வன்னியிலிருந்து இடம்பெயரும் மக்களுக்கு வேண்டிய சகல அடிப்படை, அத்தியாவசிய மற்றும் குடியிருப்பு வசதிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறதுஎன்றார்
!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டாலும் அங்கு வாழும் மக்களுடைய வாழ்க்கையில், சுதந்திரமான நடமாட்டம் மற்றும் பயணங்களில் அச்ச நிலையிருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.

அண்மையில் கிழக்கு மாகாணம் சென்றிருந்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கிழக்கில் மக்கள் தங்களுக்கு இன்னமும் பாதுகாப்பு இல்லை என்ற உணர்விலேயே இருப்பதாக வெளியிட்ட கருத்து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்..

அவர் மேலும் கூறுகையில்,.

“5 வருடங்கள் யுத்தம் நிலவிய மண்ணில் தற்போது யுத்தம் தணிந்திருந்தாலும் முழுமையாக ஆயுதங்கள் களையப்பட்டு இன்னமும் அங்கு சுமுகமான சூழ்நிலை ஏற்படவில்லை .இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறு சிறு அச்சுறுதல்கள் இல்லாமலில்லை. எனினும் மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் மாகாண அமைச்சரவை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு சம்பவங்கள் அண்மைக் காலங்களில் இடம் பெற்றுள்ளன..

பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் .கடந்த 3 வாரங்களில் மட்டக்களப்பு நகரில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தவிர கடத்தல்களோ, கொலைகளோ, வேறு எந்தவித அசம்பாவிதங்களோ தாங்கள் அறிந்த வரை நடைபெற்றதாக எமக்குத் தகவல் கிடைக்கவில்லை..

எனவே பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்ச்சியாக முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர்பு கொண்டு கிழக்கு மக்களுக்குச் சுதந்திரமான அமைதியான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். .

குறிப்பாக பயணங்களின் போது சோதனைச் சாவடிகளிலும் வீதித் தடைகளிலும் மக்கள் அனுபவிக்கின்ற பல்வேறுபட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான பல முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளும் போது தொடர்ச்சியாக கொழும்பிலேயோ அல்லது வேறு இடங்களிலோ இடம்பெறும் குண்டு வெடிப்புகள், அல்லது அங்கு கைப்பற்றப்படும் உபகரணங்கள், வாகனங்கள் கிழக்கிலிருந்து வந்திருப்பதாக அறிய வருகின்றன. அத்தகைய வேளையில் தான், பயணங்களின் போது ஏற்படும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சில தடைகள் ஏற்படுகின்றன..

மக்கள் தங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக மாகாண சபை மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதால் அவர்ளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்என்றா
!!!!!!!!!!
வடக்கின் பல பகுதிகளைக் கைப்பற்றியதாகவும், பயங்கரவாதிகளை தோற்கடித்ததாகவும் தம்பட்டமடிக்கும் மஹிந்தவின் அரசு, தெற்கிலும் நாட்டின் நாலாபுறங்களிலும் வன்முறைக் கலாசாரத்தைத் தோற்றுவித்து அரசுக்கு எதிரானவர்களையும் மாற்றுக் கருத்துக்களை உடையோரையும் ஊடகவியலாளர்களையும் தினந்தோறும் கொன்று குவித்து வருகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: இறுதியாக இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் அரசு எவ்வாறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதோ அதே போன்று மீண்டும் எதிர்க்கட்சி மீது தனது அடாவடித்தனங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது. நான் சார்ந்த புத்தளம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அரச தரப்பால் இடம்பெற்று வருகின்றன.

அரச சொத்துக்களும் அரச வாகனங்களும் தமது சுய தேவைக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எமது கட்சியினரது வாகனங்களும் அரச காடையர்களால் பலவந்தமாக பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அரசில் அங்கத்துவம் வகிக்கும் புத்தளத்தில் செயற்படும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஒருவர் மஹிந்தவின் ஆசிர்வாதத்துடன் அங்கு தனது காடைத்தனத்தை காட்டி வருகின்றõர். அவரது அடியாட்களால் எமது கட்சியின் ஆதரவாளர்களும் ஏன் எனது சாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தாக்கப்பட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளியேறியுள்ளர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். பொலிஸில் நான் முறைப்பாடு செய்ததன்பேரில் பொலிஸார் சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களை கைது செய்த போதிலும் அரச உயர் மட்டத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் பொலிசாரின் ரி56 ரக துப்பாக்கிகளையும் அபகரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கெதிராக உயர் பொலிஸ் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. சாதாரண பொலிஸாரே பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பயப்படும் நிலை காணப்படுகின்றது.

நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அரசின் அடாவடித்தனங்களுக்கு உறுதுணை புரிந்து பொலிஸ் ஒழுக்க விதிகளை மீறி வருகின்றனர்.என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களில் சுமார் 15 பெர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியகிழக்கு, மலேசியா மற்றும் ஐரோப்பாவிற்கு செல்ல மற்றும் இலங்கைக்கு வர முற்பட்டவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டது. வடக்கும் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் விரைவில் வந்துவிடும். இந்த நிலையில் எம் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த இருமாகாணங்களிலும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதே அந்தப் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு கூறுகிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்.

மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.

வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!
சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் நாளினை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் அந்த நாளில் நடத்தப்பட உள்ள கண்டனப்பேரணியில் பங்கேற்குமாறும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
INDIA
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் 5 ஆவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர்.
5 ஆவது இந்த உண்ணாநிலை நீடித்தது. 5 நாட்களாக உணவு சாப்பிடாததால், உண்ணாநிலை இருக்கும் 14 மாணவர்களும் மிகவும் சோர்வாக படுத்து இருந்தனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர்.
.தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 5 ஆவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டு வரும் 14 மாணவர்களுக்கும் வைகோ பொன்னாடை போர்த்தினார்.

உண்ணாநிலை இருந்து மயங்கி விழுந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் கெம்பு குமார், ஆறுமுக நயினார் ஆகியோரை நேரில் சென்று வைகோ பார்த்தார
!!!!!!!!!!
இலங்கையில் தமிழ் மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழின மக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கையில் தமிழ் மக்களை காப்பதற்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இலங்கையில் சுமார் 4 லட்சம் மக்கள் காடுகளில் உணவு, உடை இன்றி மிருகங்களை போல வாழ்ந்து வருகின்றனர்.
எனவே தமிழ் மக்களை காப்பாற்ற மத்திய அரசும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
!!!!!!!!!!!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பிரணாப் முகர்ஜி மருத்துவமனையிலுள்ள முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி வாயிலாக இன்று காலையில் தொடர்புகொண்டு பேசினார். .

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரணாப் முகர்ஜியிடம் அப்போது இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி பேசியதாகவும், இன்று மாலை தாம் இலங்கைக்குச் செல்வதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வது பற்றி இன்று தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் இன்று அறிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது, தமிழக நிதியமைச்சரும், அவை முன்னவருமான அன்பழகன் 10.21 மணியளவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் விசாரித்ததாகவும், அப்போது முதல்வர் கேட்டுக் கொண்டதையடுத்து இன்று இலங்கை செல்லவிருப்பதாக பிரணாப் முகர்ஜி கூறியதாக அன்பழகன் அந்த அறிவிப்பின்போது குறிப்பிட்டார்.!!!!!!!!!!!!!!

குடியரசு தினமான நேற்று அந்தியூரில் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவப்படங்களை விஷமிகள் சிலர் அவமதித்தால் பரபரப்பு ஏற்பட்டது. .

அந்தியூரில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படங்களுக்கு விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். இதை கண்டித்து காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர்.

!!!!!!!!!
சென்னை : ஈழத் தமிழர் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசினை கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் டெல்லி‌யி‌ல் பாராளும‌ன்ற‌ம் அரு‌‌கி‌ல் பி‌ப்ரவ‌ரி 13ஆ‌ம் தே‌தி ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ தலைமை‌யி‌ல் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் தலைமை‌க் கழக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 12ஆ‌ம் தே‌‌தி வை‌கோ உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ப்பா‌ர் எ‌ன்று ஏ‌ற்கனவே அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
!!!!!!!
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓய்வின் போது, குடியரசு தின விழா அணிவகுப்பை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து உடல் நிலை தேறி வரும் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கொடியேற்றியதையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை பார்த்தார்.

இத்தகவலை பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தற்போது பிரதமர், திரவ உணவு அருந்துவது மாறி லேசான திட உணவு சாப்பிடத் தொடங்கியிருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

பிரதமரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!
”உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற தீர்ப்பு வந்தவுடன் அடுத்த 6 மாத‌த்‌தி‌ல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறினார்
செ‌ன்னையை அடு‌த்த மாதவர‌த்‌தி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னைதடா இடையே அமைக்கப்படவுள்ள 6 வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா‌வி‌ல் மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், கடந்த நா‌ன்கரை ஆண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 9,250 கி.‌மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

தமிழகத்தி‌ல் இதுவரை சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.32,821 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த டி.ஆ‌ர்.பாலு, தமிழகத்தில் உள்ள துறைமுக வளர்ச்சி பணிகள் ரூ.21,215 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன எ‌ன்று‌ம் இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் தமிழகத்திற்கு பொருளாதார மேம்பாடு மூலம் ரூ.2 லட்சம் கோடி கிடைக்கும் எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைவதை, இடதுசாரி தலைவர்கள் தடுத்து வந்தனர் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய அவ‌ர், அதனால் ஏற்பட்ட காலதாமதத்தால் தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் சேது சமுத்திர திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டது எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த அமை‌ச்ச‌ர் டி.‌ஆ‌ர்.பாலு, சர்ச்சைக்குரிய 22 கி.மீ தூரம் தொடர்பாக உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு நடைபெற்று வருவதா‌ல் பணிகள் தற்போது தாமதப்படுத்தப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற தீர்ப்பு வந்தபிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் எ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!
மங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்த இளம் பெண்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்திய ஸ்ரீராம சேனா அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த ஆண்கள், இளம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆபாசமாக நடமாடியதாகக் கூறி பெண்களை கடுமையாகத் தாக்கினர். இதில் சில இளம் பெண்கள் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த ஸ்ரீராம சேனா அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டரா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில மேற்கு சரக காவல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் (.ஜி) பிரசாத் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இளம் பெண்கள் மீதான இந்தத் தாக்குதல் துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஸ்ரீராம சேனா அமைப்பினரைக் கைது செய்ததைத் கண்டித்து அம்மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கலவரங்களும், அரசு பேருந்துகள் கல்வீச்சும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியில் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சாம்னா நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ரவுத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

பந்தூப் என்ற இடத்தில் சஞ்சயின் வீட்டில் இன்று காலை அவரைக் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் 21 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, அந்த விடுதிக்குள் கடந்த வாரம் புகுந்த சிவசேனா கட்சியினர் 500 பேர், அங்கு தாக்குதலில் ஈடுபட்டதுடன், சமையலறையையும் அடித்து உடைத்தனர்.

இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிவசேனா எம்.பி கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்கு சஞ்சய் ரவுத் தலைமை தாங்கியதாகவும், கைது செய்யப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
 
world
இந்தோனேஷியாவின் சுமத்ராவில் உள்ள பாதூ தீவின் மேற்குக் கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமத்ரா தீவின் சிபோல்கா பகுதியில் இருந்து தென்மேற்கே 232 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 35 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 1.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை 6.27 மணியளவில் (இந்திய நேரம்) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐஸ்லாந்து நாட்டின் வங்கிகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாக நிலைகுலைந்து போனதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது.
அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஹார்டி அவர்கள் தமது குடியரசு கட்சிக்கும் தமக்கு ஆதரவளிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதைத் தொடர்ந்து, தமது பதவி விலகல் கடிதத்தை அதிபரிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அவசரமாக எதிர்வரும் மே மாதம் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்று ஹார்டெ அவர்கள் கோரியுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக ஐஸ்லாந்து அரசாங்கம் தனது வங்கிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கியதோடு, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் வேறு நிறுவனங்களிடமிருந்தும், பத்து பில்லியன் டாலர் கடனையும் பெற்றிருந்தது.
!!!!!!!!!!
ஜிம்பாப்வேயில் நிலவும் அரசியல் தேக்க நிலையை தீர்க்கும் முகமாக மற்றொரு கூட்டத்தை தெற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் கூட்டியுள்ள நிலையில், முகாபே அரசுக்கு எதிரான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் இறுக்கியுள்ளது.
முகாபே அவர்களுக்கு தொடர்புடைய மேலும் 60 பேர் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை ஏற்கனவே பயணத் தடை மற்றும் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் சேர்த்துள்ளனர்.
மேலும் ஜிம்பாப்வேயில் முகாபே அவர்களை பதவியில் தக்க வைப்பதற்கு உதவும் வகையில், சட்ட விரோதமான முறையில் வைர வியாபாரம் நடைபெற்றது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
!!!!!!!!!!
சோமாலியாவில் இருக்கும் பைடோவா நகரில் தீவிர சண்டைகள் ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பிய படைகள் அகற்றப்பட்ட பிறகு இடைக்கால அரசாங்கத்தின் பலம் வாய்ந்த பகுதியாக கருதப்படும் இந்த பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பித்திருக்கின்றன.
சோமாலிய நாடாளுமன்ற கட்டிடத்தையும், அதிபர் மாளிகையையும், அரசுக்கு ஆதரவான ஆயுதகுழுக்களுடன் சண்டையிட்டுவரும் அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களிடம் சண்டையிட்டுவந்த எத்தியோப்பிய படைகள் நேற்று இரவு பைடோவா நகரிலிருந்து அகன்ற பிறகு, அங்கு பரவலான சூறையாடல் இடம்பெற்று வருகிறத
!!!!!!!!!!!

sports
ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் 6- 1, 2- 6, 6- 4, ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியபஹாமாஸ் இணையான மகேஷ் பூபதிமார்க் நோல்ஸ் இணை தகுதி பெற்றது.

தரவரிசை வழங்கப்படாத ஸ்பெயின் இணையான பெர்னாண்டோ லோபஸ்ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோ இணையை பூபதிநோல்ஸ் இணை 6- 1, 2- 6, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரட்டையர் அரையிறுதிக்கு முன்னேறினர்
!!!!!!!!!!!
1 euro = 150.20sl /64.42in
1us $ =113.85sl /43.83in
1swiss fr =99.92sl /42.86in
1uk pound =160.06sl /68.65in

Leave a Reply

Your email address will not be published.